பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 இதற்குத்தான் சொன்னேன். கேட்டாரா மனுஷன்? இப் போது அவரைச் சந்தித்தால், அவரோடு கலந்து யோசித்தால் எத்தனே அநுகூலமாக இருக்கும்? இந்தச் சென்னைப் பட்டணத் திலே இப்போது அவரை எங்கே என்று தேடுவது? தேடினுல்தான் கிடைப்பாரா? தேடும் படலத்திலே காலம் விரயமாவதுதான் மிச்சமாகும். உம், இடிக்கும் புடைக்கும் ஒண்டிக்காரய்ைத் தல்ை கொடுக்கவேண்டும் என்று இருக்கிறபோது. இப்போது.பம்பாய் செல்லலாமா ? குறிப்பிட்ட விலாசத் திலே பூரீநிவாசன் இருப்பான? ராஜம் இருப்பாளா? அப்படி இருக்கும் பட்சத்தில் இதுகாறும் அவளுல் அவளுக்குக் கேடு எதுவும் நேராமல் இருந்திருக்குமா? கேடு என்ன? அவன் அவளை ஏதாவது உபத்திரவம் செய்திருக்கும் பட்சத்தில் கட்டாயம் அவள் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பாள். அதே தவிர.... சரி. குழம்பிக் குழம்பி யோசனை செய்வதில் பயன் இல்லை. அடுத்த ரெயிலுக்கே பம்பாய்க்குக் கிளம்ப வேண்டியதுதான் ! இந்த முடிவோடு தன் அறையை நோக்கிச் சென்ற பாஸ்கரன் வழியில் நண்பன் ஒருவனேச் சந்தித்தான். எங்கே போய்விட்டு வருகிருயப்பா? கண்மண் தெரியாமல் கனவேகமாக இருக்கிறதே நடை!” - "எங்கும் இல்லை. என் அண்ணன் வீட்டிற்குத்தான்.” என்ன விசேஷம்?" கோபம் கோபமாக வந்தது பாஸ்கரனுக்கு. "என்ன அப்பா உன் கேள்வி வெகு விசித்திரமாக இருக் கிறதே!அண்ணன் தம்பி ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு விசேஷம் என்று ஒன்று வேண்டுமா?" ६

  • கோபித்துக் கொள்ளாதே பாஸ்கரா. உனக்கும் நீநிவாச னுக்கும் அவ்வளவு பொருத்தம் இல்லையே; உன் மதனியுங்தான் ஊரில் இல்லை என்று ஏற்கனவே சொல்லி இருக்கிருயே; இப்படிப் பட்ட கிலேமையிலே திடீரென்று அவனேத் தேடிப் போய் வர என்ன காரணம் என்று கேட்டேன். அதுகூடக் கேட்டிருக்க மாட்டேன்; பூநீகிவாசனப் பாம்பே எக்ஸ்பிரஸ்ஸிலே பார்த்ததால் ஏதோ கேட்கத் தோன்றிற்று."

பாஸ்கரன் சாந்தமடைந்தான். தன் பதற்றமான புத்தியைத் தானே கொந்து கொண்டான். பிறகு கேட்டான்: . மன்னித்து விடு கோபாலா. கொஞ்ச நாட்களாகவே எனக்கு மனசு சரியாக இல்லை. அதல்ை எடுத்ததற்கெல்லாம் இப்படி மனிதர்களின் தராதரத்தைக் கூடப் பாராமல் எரிந்து விழும் ஒரு கெட்ட சுபாவம் எனக்கு ஏற்பட்டு விட்டது.”