பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 அவர் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தார். வேறு ஒன்றும் அல்ல; அவளிடமிருந்து பெற்றுக்கொண்ட டிக்கட்டை யும் ஒரு காகிதத்தையும் வைத்துப் பரபரவென்று என்னவோ எழுதிக்கொண்டிருந்தர்ர். தன்க்காக அந்த மனிதர் எடுத்துக் கொள்ளும் பிரயாசைகளைக்கண்டதும் அவள் உள்ளம் நெகிழ்ந்து போயிற்று. ஒருவாகத் தம் அலுவல்களை முடித்துக்கொண்டு தல்ை கிமிர்ந்தார் அவர், ரெயில் எத்தனே மணிக்கு ?’ என்று கேட் டாள் அவள். - - விடியற்காலம் மூன்றரை மணிக்கு." 'அது வரையிலே இங்கே.' " பயம் ஒன்றும் இல்லை. நடுவே கூட்ஸ் ஒன்று வரும். எனக்கு இரவு பூரா வேலே இருந்துகொண்டே இருக்கும். கான் துரங்கவே மாட்டேன். அப்படி உனக்கு இங்கே இருக்கப் பயமாக இருந்தால் இதோ பக்கத்திலே தான் என் வீடு. அங்கே வேண்டுமானலும் போய் இருக்கலாம்.' ! அங்கே யார் இருக்கிருர்கள்?" * யாரும் இல்லே. என் மனைவியும் குழந்தையும் முந்தா காள் தான் ஊருக்குப் போனர்கள்.' அப்படியால்ை நான் இங்கேயே இருக்கிறேன்." . " எனக்குத் தெரியும், மனித நடமாட்டம் இல்லாத வீட்டை விட நீ இந்த இடத்தைத்தான் விரும்புவாய் என்று. சரி, ஜாக் கிரதையாக இரு. நான் வெளியே போய் வருகிறேன்." எங்கே போகவேண்டும்?" - நானும் ஆகாரம் முடித்துச்கொண்டு உனக்கும் எடுத்து வருகிறேன். தூக்கம் வந்தால் கதவை உட்புறம் காளிட்டுச் கொண்டு படுத்துத் துக்கு. இல்லாவிட்டால் இதோ பத்திரிகை, கதைப் புத்தகம் எல்லாம் இருக்கின்றன. படித்துக்கொண்டிரு. இங்கே யாருமே வரமாட்டார்கள். தப்பித் தவறி யாராவது வந்து ஏதாவது கேட்டால் என் தங்கை என்றே சொல்லிக்கொள்.' இப்படிக் கூறிவிட்டு அவர் நடையைக் கட்டினர். நேரம் சென்றுகொண்டிருந்தது. ராஜத்தின் இருதயம் டக் டக் கென்று அடித்துக்கொண்டது. இருந்தாற்போலிருந்து வலது தோளும், வலது கண்ணும் பட பட வென்று துடித்தன். அதன் பலனே அவள் அறியாள். கடபுட வென்ற பேரிடிகள். பளிர் பளீர் என்ற மின்னல் கள். பட படவென்ற துற்றல்கள். கடினத்திலே துாற்றல்கள் பெரு மழையை வருவித்தன. ஜோவென்று மழை கொட்டத் தொடங்கி விட்டது. இத்தனையும் போதாதென்று பெருங்காற்று