பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 திருப்பிப் புடைவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண் டாள். மெல்ல மெல்ல கடந்து உள்ளே சென்ருள். இரவு ஒன்பது மணி இருக்கும். புருஷர்கள் சாப்பிட்டுவிட்டு வாசற் பந்தவிலே போய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஸ்கிரீகள் சாப்பிட உட்கார்ந்தனர். அங்கே ராஜம் இல்லே. எங்கே எங்கே என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். ஒவ்வோர் அறையாகப் போய்த் தேடினர்கள். முதற்கட்டு, இரண்டாங் கட்டு என்று எல்லா இடங்களிலும் தேடிப் பார்த் தார்கள். ராஜத்தை எங்குமே காணவில்லை. இதற்குள் இந்த விஷயத்தை வாசலில் பேசிக் கொண்டிருந்த தன் தகப்பனரிடம் போய்த் தெரிவித்தாள் செள்தாமினி, சுந்தரேசன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து ஓடி வந்தார். மறறவர்களும் பின் தொடர்க் தார்கள். ஆளுக்கு ஒரு லேட்டை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள மூலே முடுக்கெல்லாம் தேடிவிட்டுத் தோட்டத்துப் பக்கம் போனர்கள். கொட்டில், வைக்கோல் போர் அடி, நெல்சேர் அடி, மாங்கள் அடர்ந்த இடம் இப்படிப் பார்த்துக் கொண்டு வருகையில் கிணற்றுப் பக்கமும் பார்த்தார்கள். அடிவாரத்தில் தண்ணிரில் சலசலப்புக் கேட்டது. உடனே பாபாவென்று கிணற்றில் இறங்கின்ை பூரீநிவாசன். ராஜம் அங்கே தான் இருந் தாள். இதோ" என்று கூவினன் பூரீநிவாசன். உயிர் இருக்கா? என்று பதற்றத்துடன் கேட்டார் சுந்தரேசன். * 6. காய்ச்சல்! றுநீ கிவாசனல் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. அவன் அங்கே மூச்சுக்கூட விட முடியாமல் கிணறித் திக்குமுக்காடிக் கொண்டிருந்தான். அது வீட்டுக் கிணறு அல்ல. மரம், செடி, கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும் தோட்டக் கிணறு. சுற்றள விலும் ஆழத்திலும் அதிகம்ானது. ஆகவே அதில் பூரீநிவாசன் பரபரப்புடன் இறங்கிவிட்டானே தவிர இறங்கின.பிறகு அங்கே தண்ணிருக்குள் ஆழ்வதும் மேலுக்கு வருவதுமாக இருந்த ராஜத் தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு கால் கை முதலியவற்றை வாட்டமாக கிலிேக்க வைத்துக்கொள்ள முடியாமல் தத்தளித்தான். அங்கிலையில் அவல்ை சுந்தரேசனின் கேள்விக்கு எப்படி பதில் கொடுக்க முடியும்? அவன் பதில் பேசாததிலிருந்து கரைமேலிருந்த சுந்தரேசன் முதலியோரின் கவலே எல்லையைக் கடந்ததாக ஆகி விட்டது. எனவே மீண்டும் மீண்டும், உயிர் இருக்கிறதா?” என்ற கேள்வியையே திருப்பித் கிருப்பிக் கேட்டார் சுந்தரேசன். கூட இருந்தவர்கள் உருப் புரியாமல் கூச்சல் போட்டனர்.