பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 குழந்தைகள் தகப்பனரின் முகத்தை ஜாடையாகப் பார்த்' தன. ல்ட்சுமி அவரை நெருங்கிப் பேச முயன்ருள். அவர் யாரை யும் ஏறிட்டுப் பாராது ம்ெல்ல நடந்து தெரு முனேயிலே உள்ள கிருஷ்ணன் கோவில் வாசலிலே போய் உட்கார்ந்து கொண்டார். ஆகாயத்தை நோக்கினர். ஈசுவரா!' என்ற வார்த்தை அவரது அடிவயிற்றிலிருந்து குமுறிக் கொண்டு வெளிவந்தது. 13. அதோ, ரமணி! மறுநாள் காலையில் ராஜம் ஊருக்குப் போய்விட்டாள் என்று அறிந்தபோது, த்ஸொ த்ஸோ' என்று அங்கலய்த்தான் வேணு. சென்னேயிலே உன் கணவனேக் கண்டேன். பேசிக் கொண்டிருந்தேன். புத்திமதிகளைச் சொன்னேன். கூடிய சிக்கிரம் இங்கே வருகிறேன் என்ருன்' என்று அவளிடம் சொல்ல கினேத்த போது லட்சுமியின் காலில் காயம் பட்ட அமளி குறுக் கிட்டு அதைச் சொல்லமுடியாமல் போய்விட்டதே என்ற குறை அவனுக்கு. "கிடுகிடுப்பென்று பூநீநிவாசன் வந்து ராஜத்தை அழைத்துச் சென்றதன் மர்மம் என்ன்? இவர்தான் கடிதம் எழுதி வரவழைத் திருக்க வேண்டும். அடாடா!....அவளுக்கு ஒரு பட்டத்தைக் கட்டி ஊர்கிரிக்க வைத்துக் கொட்டத்தைக் குலேக்க வேண் டும் என்று இருந்தேனே! அதற்குள் அகியாயமாகப் போய்விட் டாளே - உம். தொலையட்டும்”......என்று இப்படி என்ன என்னவோ எண்ணமிட்டாள் லட்சுமி. எத்தனே அன்பும் ஆசையுமாய் இருந்தாள் சித்தி திடீர் என்று சித்தப்பா வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டாரே ! இனிமேல் அவளை எப்போது பார்க்க முடியுமோ என்னவோ ! என்று ஏங்கினர்கள் குழந்தைகள். - உம். நான் ஒன்று கினேத்தால் விதி ஒன்றை நடத்தி வைக் கிறது. அந்தக் குழங்தை இன்னும் என்ன என்ன கஷ்டங்களே அநுபவித்து ஆக வேண்டும் என்று அதன் தலையில் எழுதி இருக் கிறதோ யார் கண்டது? லலிதா கவாலயத்தைப் பற்றி எல்ல்ோ ரும் சிலாகித்துத்தான் சொல்லுகிறர்கள. போகட்டும். எப்படியா வது எங்காவது செளகரியமாக இருந்தால் சரி. அவள் படிப்பு பாட்டு, கைத்தொழில் முதலியவற்றைக் கற்று அவற்றின் மூலக் தான் ஜீவனம் நடத்தி ஆகவேண்டும் என்பதில்லை. என் சொத்தி -லிருந்து அவளுக்கு வேண்டியதைக் கொடுத்து விடுகிறேன். என்ற