பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 பாராத சண்ட்ாளகிைய என் விஷயத்திலே நீ சற்றும் யோசனை இன்றி இப்படிச் செய்தது உன் பெருந்தன்மையையே காட்டு கிறது. என்ருலும் இவைகளே நான் ஒருபோதும் எடுத்துச் செல்லமாட்டேன். வரும் கஷ்டங்களே முடிந்தால் வேறு வகை களில் நிவர்த்தி செய்கிறேன்; அல்லது அநுபவித்துத் தீர்க்கிறேன். அதே தவிர ஒருகாலும் இந்தச் செயவில் ஈடுபடமாட்டேன்.” அப்போது என்ன அர்த்தமாம்? என்னே உங்களுடையவ ளாக இன்னமும் பாவிக்கவில்லை என்றுதான் ஆகிறது.' 袭 'அடாடா! வருத்தப்பட்டுக் கொள்ளாதே ராஜம்.' நீங்கள் இதைக்கொண்டு உங்கள் தொல்லேயைத் தீர்த்துக் கொள்வதாகச் சொன்னுல்தான் என் மனம் குளிரும். மேலும் இவை எல்லாம் உங்கள் அண்ணு செய்து போட்டவைகள்தாமே ? உங்களுக்கு இரு வகைகளில் பாத்தியம் உள்ளவைகள்தாமே?” நல்லது. இத்தனே துராம் நீ பிடிவாதம் செய்கிறபோது நான் மறுப்பதும் உசிதப் பிசகுதான். சரி. இவைகளைக் காலேயிலே வாங்கிக் கொள்கிறேன். இப்போதைக்குப் போட்டுக் கொள்.' போட்டுக் கொள்வானேன்; அப்புறம் கழற்றுவானேன்? இல்லை. அவசிய்ம் போட்டுக் கொள்ளத்தான் 3/ನಾಲ್ಡಿಹಿ.' " வினுக இந்தச் சின்ன விஷயத்தில் ஏதுக்காக இப்படிப் பிடி வாதம் செய்கிறீர்கள்?" காரியம் இல்லாமலா சொல்வேன்?' என்று குறும்புத்தன. மாகச் சிரித்தான் அவன். குப்பென்று அவள் கன்னங்களில் சிவப்பு ஏறியது. சட் டென்று அவன் எதிரிலிருந்து ஒடி ஒளிந்துகொள்ளவேண்டும் போன்று இருந்தது அவளுக்கு. அவன் அதற்கு இடம் தந்தால் தானே? தாவி அவளைப் பிடித்தான். தன் மடி மீது உட்கார வைத்துக்கொண்டான். அந்த ககைகளே எடுத்து ஒவ்வொன்முக அவளுக்கு அணிவித்தான். 21. வருவாரே, என் நாதன்' பிறவிப் பயனே அடைந்துவிட்ட ஆனந்தத்தால் கிறைந்த உள்ளத்தோடு அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்து கிடந்த ராஜத்தின் நிர்மலமான முகத்கில்ே தவழ்ந்து விளையாடும் தீபத்தின் நிழலாட் டத்தை நோக்கியபடி சிந்தனையிலே ஈடுபட்டிருந்தான் ரமணி.