பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 போன-தன் மாமா ரமணிக்கும் முதல் நாள் இரவு வந்து காதல் புரிந்து சென்ற கணவன் ரமணிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணி எண்ணி வியந்தாள். அப்படிப்பட்ட வன்.இப்படி மாறி வருவான் என்று கனவிலும் கருதாத அவளுக் குத் தெய்வம் காட்டிய கருணையை நினைத்தபோது அவள் உள்ளம் குழைந்து போயிற்று. முதல் நாளுக்கு முதல் நாள் இரவு நீகி வாசன் செய்த அடாத செயலைப் பற்றிய கினேவும் அப்போது மனத்தின் ஒரு மூலையிலே ஏற்படத்தான் செய்தது, ' என்ன அக்கிரமம்'ய்ாருக்கு உரியதை யார் அபகரிப்பது? ஐயோ!" என்று வாய்விட்டுக்கூறி உடலைச் சிலிர்த்துக்கொண்டாள். மாலை யில் இவர் வந்து விடுவார். அதுவரை, அந்தப் பரவி வராமல் இருக்கவேண்டுமே!’ என்று எண்ணிக்கொண்டாள். சுற்றிச் சுழன்ற மனம் மறுபடியும் முதல் நாள் இரவு நட வடிக்கைகளில்ே,வந்து நின்றது. ரமணியின் அன்பில்ை அவள் உடலிலே தோன்றிய இன்பவவி, சம்பவங்களே கினைத்துச் சுவைக் கும் தூண்டு கோலாக இருந்தமையின் அவள் அப்போதைக்குத் தன் வயம் இழந்தவளாக ஆள்ை. அதன் விளைவாகப் பொழுதெல் லாம் உடனே தொலைந்து மாலை ஆகக் கூடாதா என ஏங்கிள்ை. பால்காரன் குரல் கொடுத்தான். சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தாள் ராஜம், பாலே வாங்கிக்கொண்டு கதவைத் காளிட்டுக்கொண்டு உள்ள்ே வந்தாள். எப்பொழுதோ எங்கோ பார்த்த சினிமாவிலே ஒரு கதாநாயகி பாடிய, வருவாரே என் காதன்” என்ற பாடல் நினைவுக்கு வந்தது. அதை முணுமுணுத்த படி குதிபோட்டுக்கொண்டு சமையல் அறைக்குச் சென்ருள். தடதடவென்று யாரோ தெருக் கதவைத் தட்டும் சத்தம் வந்து அவள் இன்ப கினேவைக் குலத்தது. ரமணிதான் ஒரு கால் கிரும்பி வந்து விட்டானே என்று ஒரு சபலம். கதவைத் திறக்க விழுக்கடித்துக் கொண்டு ஓட்டமாக ஓடினுள். ஆவலோடு கதவைத் திறந்த ராஜத்தின் முன் காட்சி அளித் தான் பூநீநிவாசன். அவனேக் கண்டதும் அவளுக்கு அடிவயிற்றிலே இடிவிழுந்தாற்போல இருந்தது. அவள் தாளே நீக்கினது தான் தாமதம், அவன் பரபரப்புடன் கதவை கெட்டித் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான். உடல் விதிர்க்க, ஒன்றுமே தோன்ருமல், பதறிப் போன நிலையில் கின்றிருந்த அவ்ன் சட்டென்று நாலடி இன்னுக்குச் சென்றுள். அதே வேகத்துடன் கொல்லப் புறம் பேரளுள். அப்படியே அடுத்த வீட்டுக்கோ வேறு எங்காவதோ போய்விடலாம் என்பதுதான் அவள் எண்ணம். ஆல்ை அதற்குள்