பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 இவனே என்மீது உள்ள துவேஷத்தால் வலிய ஏதாவது உளறி வைத்தானுைல் ? கண்டிப்பாக என்னே விபசாரி என்றுதான் அவர் கினேப்பார். ஆகவே நடந்தது நடந்தபடி சொல்லி விடுவதுதான் நல்லது...ஆல்ை அதிலும் ஒரு கஷ்டம் இருக்கிறது. நான் சொல்வதை அப்படியே அவர் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே! எனக்குச் சாதக மானவற்றை மட்டும் சொல்லி மற்றவற்றை மறைக்கிறேன் என்று எண்ணி விட்டாரா ல்ை? ஆம். அவர் ஓர் அவசரப் புத்திக்காரர். ஒன்று கிடக்க ஒன்று ஆனாலும் ஆகிவிடும். காலமெல்லாம் காத்திருந்து குருடனுக குப் பார்வை கிடைத்தது போலக் கிடைத்தை வாழ்வைக் கொள் ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொள்வது போலக் காரி யத்தைச் செய்து கெடுத்துக் கொள்ளக்கட்டாது. மனம் இயங்கி நல் வாழ்வை அருளிய தெய்வம் இதற்கும் தன்னுலே ஒரு வழியைத் தேடித் தரும். அதுவரை நாம் பேசாமல் இருப்பதே நலம் இப்படியெல்லாம் குருட்டு யோசனைகளைச் செய்துகொண்டே படுத்திருந்தவளுக்குப் பொழுது போனதே தெரியவில்லை. ராஜம்' என்று பூநீநிவாசன் குரல் கொடுத்ததுந்தான் உணர்வு பெற்றுத் திடுக்கிட்டு எழுங்தாள். அவன் கொல்லைத் தாழ்வாரத்திலே இல்ே முதல் தண்ணீர் வரையில் சாதம், குழம்பு, கறி, மோர் எல்லாம் வரிசையாகச் சீர்வைப்பது போல வைத்திருந்தான். அட அதற் குள் இத்தனை விபவமாகச் சமையல் செய்து விட்டானே! என் னிடந்தான் எத்தனே அன்பு இரண்டு நாள் கழித்துத் தலே முழுகி விட்டு வந்ததும் இவள் நம்முடையவள் ஆகப் போகிருள்' என்கிற நினைப்பிலே அல்லவா இத்தனே சுறுசுறுப்பான உழைப்பும் உட சர்ரமும்!" என்று ஆத்திரத்தோடு பல்லேக் கடித்துக் கொண்டாள். "மகா பாவி மாமியார் மரணப் படுக்கையில் இருப்பதாக மனேவியை அழைத்துக் கொண்டு போன்ை. என்ன ஆயிற்ருே என்னவோ; இங்கே ஏதோ கொள்ளே போகிருப்போல ஓடிவந்து விட்டான், விழுந்து அடித்துக் கொண்டு !...' என்று மனத்திற் குள் சபித்தாள். அவன் என்ன என்னவோ சொன்னன். பிறகு அப்பால் சென்ருன். அவள் விரைந்து சென்று அவன் வைத்துச் சென்றவைகளை எடுத்து வந்து தாழ்வாரத்திலே வைத்து மூடினுள். கதவைச் சாத்திக்கொண்டு மறுபடி படுத்தாள். அவளுக்குத்தான் பசி, தாகம் எதுவுமே தோன்ற வில்லைய்ே! ஆல்ை அவன் அதை யெல்லாம் என்ன கண்டான்? நாம் வைத்ததை யெல்லாம் எடுத் துக் கொண்டாள்; சாப்பிட்டாள்; நம்மைக் கண்டதும் கூ கூ! கொள்ளே! என்று கத்தவில்லை. ஆகவே அவளும் யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டாள் போல் இருக்கிறது; கம் பாடு வேட்டை தர்ன் ....' என்றெல்லாந்தான் மனுேராஜ்