பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 மணிகள்,வயதானவர்கள்,சிறு பிராயத்தினர்-இப்படி எவரிடமா வதுதான் கேட்கவேண்டும் என்கிற எண்ணம். ஆனல் அவள் எண்ணத்திற்கு இசைந்தாற்போல், மனத்திற்குப் பிடித்தமானவர் களாக எவருமே எதிர்ப்படவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு தாடியும் மீசையுமாக ஒரு கிழவரைக் கண்டாள். கெளரி நகர் எங்கே?' என்று விசாரித்தாள். அவர் சொன்ன அடையாளங்களை மனத்தில் பதிய வைத்துக்கொண்டு' அந்த வழியே சென்ருள். கொரி நகரை அடைந்தாள். லக்ஷ்மண் முதலித் தெருவையும் அடைந்தாள். பதினேழாம் நெம்பர் வீட். டையும் கண்டுபிடித்துவிட்டாள். - - சின்னஞ்சிறு வீடுதான். ஆனல் மிகவும் லட்சணமாக இருந்தது. வாசம் கேட்டு உட்புறமாகத் தாளிட்டு இருந்தது. முன் புறத்து அறையின் ஜன்னலின் மேல் வரிசைக் கதவுகள் திறந்து இருந்தன. உள்ளே மின்சார தீபம் பிரகாசித்துக்கொண்டிருந். தது. மேலோட்டமாக இதையெல்லாம் பார்த்துவிட்டு, கேட்டைத் தட்டிக் கூப்பிடலாம் என்று கினேத்து அடி எடுத்து வைத்தபோது அறையின் இடது பக்கத்துச் சுவரில் அவள் பார்வை விழுந்தது. அங்கே பெரிதாக என்லார்ஜ் செய்யப் பட்டிருந்த சமனியின் புகைப் படம் மாட்டி இருப்பதைக் கண்டாள். அவள் சரீரமும் மனமும் உணர்ச்சி வசம் ஆயின. சுந்தா புருஷனை ரமணியை, கேரிலே பார்ப்பதுபோன்ற் கிலேயிலே விளங்கிய அப் படத்தைச் சற்று நேரம் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் காலடி எடுத்து வைக்கப்போனபோது அவள் பார்வையை மற். ருெரு பொருள் கவர்ந்து இழுத்தது. கோட் ஸ்டாண்டிலே தொங்கிய சில்க் ஜம்பர்தான் அது. அவள் சரீரமும் மனமும் இப்பொழுதும் ஒரு முறை உணர்ச்சி வசம் ஆயின. ஆல்ை முன்னதற்கும் பின்னதற்கும் எவ்வளவோ வித்தியாசம். தத் தளிக்கும் உள்ளத்துடன் அவள் கின்றிருக்கையில், அறையில் நாற்காலியைவிட்டு எழுந்து ஜன்னல் வழியே எச்சிலைக் காறித் 'து' என்று ஒருவர் துப்பவும் அது ராஜத்தின் முகத்திலே வந்து விழுந்தது. சட்டென்று முன்னேயால் எச்சிலேத் துடைத்துக் கொண்டு துப்பின ஆசாமியை அவசரமாகக் கூர்ந்து நோக்கிள்ை ராஜம். சுமார் இருபது வயதுடைய அழகிய பெண்மணி ! X- தன் தவற்றை உணர்ந்துவிட்ட அந்தப்பெண்ணும்,'அடாடா!' என்று பதறிப் போனுள். உடனே அறைக் கதவைத் திறந்து, ,கொண்டு வெளியே வந்து கேட்டைத் திறந்து, யாம்மா நீ? பாராமல் துப்பிவிட்டேன். தயவு ச்ெய்து என்ன மன்னித்து விடு. இரு. தண்ணிர் கொண்டு வருகிறேன். முகத்தை அலம்