பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 லாம் நமது நன்மைக்கே என்ற முடிவைக் கொண்டான். ருக் மினியைக் கொண்டு போய் அங்கே தள்ளுவது, திரும்பி வந்து ராஜத்தைக் கவனித்துக்கொள்வது என்று முடிவு கட்டினன். அவ்ன் கினேப்பிற்கு ஏற்ப அங்கே ருக்மிணியின் தர்ய்க்கு உடல் கிலே ஒரு முடிவும் கொள்ள முடியாததாக இருந்தது. தந்தி கொடுத்தபோது இருந்ததைவிட ருக்மிணி அங்கே போய்ச் சேர்ந்தபோது சற்று அநுகூலம். ஆகவே கிழப் பிராணஇனப் பற்றி எவராலும் எந்த முடிவும் செய்ய இயலவில்லே. அதுவும் சாதகமாகவே ஆகிவிட்டது பூநீநிவாசனுக்கு. "நீ வேண்டுமானல் சில தினங்கள் இரு. எனக்கு ஆபீசிலே வேலே கடுமையாக இருக்கிறது. நான் கிளம்பிப் போகிறேன். அவ்வப்போது கடிதம் போடு- என்று அவன் ருக்மிணியிடம் சொல்ல நினைத்து அவளைச் சமீபித்தபோது அவள் அவனைப் பார்த்து, ! உங்களுக்கு ஆபீஸில் என்னவோ வேலை கடுமையாக இருக்கிறது என்று சொன்னிர்களே; நீங்கள் வேண்டுமானுல் கிளம்பிப் போங்கள். நான் நாலு நாள் தங்கி இருக்கிறேன். பிறகு சக்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செய்துகொள்ளலாம். ஏன் என்னல் முக்கியமாக அங்கே ராஜம் தனிமையில் இருக்கிருள். பட்டண வாசம். பழக்கம் இல்லாத இடம். அவள் சிறிசு. தனி வீட்டிலே இருந்து கொண்டு பயந்து சாவாள்...” என்றெல்லாம் அடுக்கிள்ை ருக்மிணி. பழம் நழுவிப் பாலிலே விழுந்து, அதுவும் கழுவி வாயிலே விழுந்தது போல் இருந்தது பூரீநிவாசனுக்கு. புதையல் எடுக்கப்போகிறவன் போல விழுந்து அடித்துக் கொண்டு ஒட்டமாக ஓடிவந்தான். வண்டியிலும் பஸ்ளிலும் ரெயி விலும் வரும்போதெல்லாம் அவன் சரீரம் கடைகொள்ளவே இல்லை. கிமிஷத்திற்கு நிமிஷம் ராஜத்தைப் பற்றின கினேவு அவன் உள்ளத்தையும் உடலேயும் பற்றித் தகித்த வண்ணம் இருந்தது. கற்பனையுலகிலே பறந்தான். ஊரை அடைந்துவிட். டது போலவும், ராஜம் தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண் டது போலவும், பெரிய மனசோடு தான் அவளே மன்னித்துவிட் டது போலவும், அவள் தன் கோரிக்கைக்கு இணங்கிவிட்டது போலவும்-இப்படியாகப் பல பல கற்பனைகளைச் செய்து கொண்டும், காற்றினும் கடிதாக ஒடிக்கொண்டிருக்கும் ரெயிலை நத்தை போல ஊர்வதாதச் சபித்துக்கொண்டும், தொலையாத வழியைக் கஷ்டத்துடன் சகித்துக்கொண்டும் ஒருவாறு பிரயா னத்தை முடித்துக்கொண்டு சென்னையை அடைந்தான். பா பரப்புடன் வீட்டிக்குச் சென்று கதவைத் கட்டினன். ராஜம் விந்து கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்ததும் நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு வந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. -