பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 சுந்தரேசனேக் காணவில்லை ! இந்தச் செய்தி முதவில் வேடிக்கையாகவும் பிறகு வியப்பாகவும் முடிவில் துயரமாகவும் இருந்தது பாஸ்கர னுக்கு. பச்சைக் குழந்தையா, காணுமற் போக?' என்று அவன் கினேக்க முடியாமல் இருந்தது ஊரார் சொன்ன கதை. எல்லா வற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டு குறுக்கு ரஸ்தா, தோப்பு, துரவு, வீதி அனேத்தையும் தாண்டி வீட்டை அடைந் தான். வீடும் ஏதோ இழவு நேர்ந்த இடம் போன்றுதான் காட்சி அளித்தது. காரணம் இன்றிக் குழந்தைகள் அவனேக் கட்டிக் கொண்டு கோவெனக் கதறி அழுதார்கள். லட்சுமி பிடாரி போலக் காட்சி அளித்தாள். பல்லேக் கடித்துக்கொண்டு தொண்டையைக் கனேத்துக்கொண்டு, அண்ணு எங்கே மன்னி?” என்று கேட்டான் பாஸ்கரன். இந்தா, பிடித்துக்கொள்’ என்பதுபோலப் படபட வென்று வார்த்தைகளைக் கொட்டினுள் லட்சுமி. . என்னேக் கேட்க வேணுமா? வருகிற வழியிலே எல்லாம் கேள்விப்பட்டிருக்கலாமே ! ஊர் நாய்கள் சொல்வி இருக்குமே! உங்கள் வீட்டிலே வந்து புகுந்து மக்களைப் பெற்று, பல கஷ்டன் களுக்கும் பிணேபட்டுக்கொண்டு இருந்ததற்குப் பெரிய கல்லாகத் தூக்கிப் போட்டுவிட்டுப் போப்விட்டார் உங்கள் அண்ணு ' இதற்குமேல் அவள் வழிமாறினுள். வார்த்தைகள் குடிசைச் சண்டையிலே உதிரும் சொற்களாகத் தெறித்து விழுந்தன. சிவ சிவா! என்று காதுகளைப் பொத்திக்கொண்டு முன் வைத்த காலேப் பின்வைத்துக் கோண்டு தெருவுக்கு வந்துவிட்டான் பாஸ்கரன், தற்செயலாக வாசவில் வேனு போய்க்கொண்டிருந்தான். அடுத்த வீட்டு வாசலிலே கின்ற விஷமிகள் இருவர் பாஸ்கரனின் காதிலே விழும்படியாக வேணுவைக் காட்டி ஏதேதொ பேசினர் கள். பாஸ்கானல் பொறுக்க முடியவில்லை. நெருப்புப் பசப்பின் மீது கடப்பவன் போல நடந்து தெருவைக் கடந்தான். வேகமாகக் சென்று சென்னைக்குச் செல்லுகிற ரெயிலைப் பிடித்தான். நேரே பூநீநிவாசனிடம் வந்தான். அவல்ை வேறு என்ன முடியும்? பூசை வேளேயிலே கரடி புகுந்தது போல இந்தப் பயல் ஏதுக்காக இப்போது இங்கே வந்து தொலைந்தான்!” என்ற அரு வருப்போடு, ஒப்புக்காக, வா' என்ருன் பூரீநிவாசன். அவன் கிருஷ்ணராஜபுரத்திலிருந்து வருகிருன் என்பது பூரீநிவாசனுக்கு எப்படித் தெரியும்? உள்ளூரில் ஹாஸ்டலில் உள்ளவன் ஏதோ கரியமாக ஆந்திருக்கிருன் என்றுதான் தினத்தான். ஆனுல் பாஸ் கர்ன் பளிச்சென்று விஷயத்தைச் சொன்னதும் பூரீநிவாசன் 'ஆ' என்று வாயைப் பிளந்தான். -