பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 அறை, பின் அறை ஆகிய இடங்களுக்கெல்லாம் ஒடின்ை. அவன் ராஜத்தைக் காளுேமே என்று துடிதுடித்துக் கொண்டிருக்க பாஸ்கரன் வேறு அவனேக் கேள்விமேல் கேள்வி கேட்டுப் பிரா னனே வாங்கினன். ஆத்திரம் மேவிட்ட பூநீநிவாசன், என்னத் தைக் கண்டுவிட்டாய், இப்படிப் பிடுங்கி எடுக்கிருய்? உன் மன்னி பகிஷ்டையாய் இருந்தாள். தந்தி வந்ததும் போட்டது போட்டபடி கிளம்பிப் போய்விட்டாள். இது ஒரு பெரிய விஷயமா? என்ருன். அப்போது அங்கே ஒர் ஆசாமி வந்தார். வயசானவர். அவரை பூநீகிவாசன் அடையாளம் புரிந்துகொண்டான். இதே தட உபத்திரவம்' என்று மனசுக்குள் கினேத்துக்கொண்டு மேலுக்கு, "வாருங்கள்” என்ருன் அவருக்குப் புகலூர். ரீசிவா சனின் மாமனர் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர். பாஸ்கரனுக்கு அவரை யாரென்று தெரியவில்ல்ே.

  • வாசல் கதவுகளே யெல்லாம் கிறந்து போட்டுவிட்டு இங்கே வந்து கிற்கிறீர்களே! நாலேந்து குரல் கூப்பிட்டேன். பதிலே இல்லை. இங்கே வந்தேன். நான் வந்ததுபோல வேறு யாராவது வந்தால்? குடிக்கிற செம்பைத் தூக்கிக் கொண்டு போனலும்..." என்று அக்கறை காட்டிப் பேசினர் அவர். அது கொஞ்சங்கட்டப் பிடிக்கவில்லே பூநீநிவாசனுக்கு. ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் அந்தப் பெரியவரே பேசலானர்.

முந்தாளுள் இரவு உங்கள் மாமியார் காலமாகிவிட்டாள். இன்று உங்களுக்குக் கடிதம் வரும். நான் ஓர் அவசர காரியமாக இங்கே வங்தேன். நான் வருவதை அறிந்த ருக்மிணி என்னிடம் செய்தி சொல்லி அனுப்பினுள். அதாவது நீங்கள் பத்தாம் நாள் அன்று கட்டாயம் அங்கே வங்து சேரவேண்டுமாம். உங்கள் மரு மாள் ராஜத்தை அங்கே அழைத்து வருவதைவிடக் கிருஷ்ண ராஜபுரத்திலே கொண்டுபோய் விட்டு வருவது உசிதம் என்ருள். இவ்வளவுதான் சமாசாரம். நான் வரட்டுமா ?” - அவர் கிளம்பிவிட்டார். பாஸ்கரன் பூரீநிவாசன் முகத்தைப் பார்த்தான். பூநீநிவாசன் தரையைப் பார்த்தான். - 26. கவரிமான் ஊரில் உயர்ந்தகுடி என்று கிருஷ்ணராஜபுரத்திலும் சுற்று வட்டாரங்க்ளிலும் பெயர் வாங்கிய சுந்தரேசனின் குடும்பத்தைப் பற்றி இன்று சர்வ சாமான்ய ஜனங்கள்கூட மிகக் கேவலமாக பேசிக்கொண்டார்கள். . . . . . . . - * இங்கிரன் கெட்டதும் பெண்ணுலே, சந்திரன் கெட்டதும் பெண்ணுலே என்பது எத்தனே தூரத்திற்கு உண்மை என்பதை நிதர்சனமாகக் காட்டி விட்டாளேயா சுந்தரேசன் சம்சாரம்'...."