பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 33 அதை அனுமதிக்க மாட்டேன் என்கிற நினைப்பிலே நீங்க இது மாதிரி செய்திருக்கீங்க. அதுவும் சரிதான். சினிமா உலகத்தை இன்னும் நல்லபடியா நடத்தனும், இலக்கியப் பத்திரிகை நடத்தனும், புத்தகங்கள் பப்ளிஷ் பண்ணனும்னு எனக்கும் ஆசையாகத் தான் இருக்கு. ஆனால் பொருளாதாரம் இடம் கொடுக்கலே.' இந்த ரீதியில் பேசினார். நீங்க நல்லா வளர்ந்து முன்னுக்கு வரணும்கிறதுதான் என் விருப்பம். உங்களை மாதிரி திறமையுள்ள நல்ல அசிஸ்டன்ட் எனக்குக் கிடைக்கமாட்டாங்க இருந்தாலும், உங்களுக்குத் தெரிந்த தகுதியான ஒருவரைச் சொல்லுங்க சினிமா உலகத்துக்கு உதவி ஆள் வேண்டும் என்று செட்டியார் கேட்டுக் கொண்டார். நான் என் அண்ணா கோமதிநாயகத்தைப் பரிந்துரைத்தேன். அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். 'ஓ, உங்க அண்ணனை எனக்குத் தெரியும். உடனேயே அவருக்குக் கடிதம் எழுதி அவரை வரவழைத்துக் கொள்கிறேன்' என்று மகிழ்ச்சியோடு சொன்னார். அண்ணா கோமதி நாயகம், நான் சினிமா உலகம் அலுவலகத்தில் பணிபுரிந்த நாட்களில் ஒருசமயம் கோயம்புத்துர் வந்திருந்தார். திருநெல்வேலியில் அவர் வேலைபார்த்த மெடிக்கல் ஸ்டோர்ஸ் முதலாளியின் அதிகாரப் போக்கு பிடிக்காததால், அவரும் மற்றும் சிலரும் அந்த நிறுவனத்தை விட்டு விலகியிருந்தார்கள். கோவைக்கு வந்தால் ஏதாவது வேலை கிடைக்கும் என்று எனக்குத் தெரிந்தவர் ஒருவர் கூறியதால், நான் அண்ணாவுக்கு எழுத அவர் அங்கு வந்தார். வடநாட்டு முதலாளி ஒருவரின் ஆயத்த உடைகள் விற்பனைக் கடை ஒன்றில் அண்ணாவுக்கு வேலை கிடைத்தது. பதினைந்து-இருபது நாட்கள் அவர் வேலை பார்த்தார். அந்த முதலாளியின் லாபநோக்கு நடவடிக்கைகளும், இரட்டைக்கண்க்கு எழுதுகிற போக்கும், பொய்ம்மையும் அண்ணாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்த வேலையை விட்டுவிட்டு அவர் திருநெல்வேலிக்கே போய்விட்டார். கோவையில் தங்கியிருந்த நாட்களில் செட்டியார் அண்ணாவுடன் பேசிப் பழகியிருந்தார். விரைவிலேயே செட்டியார் அண்ணாவைச் சினிமா உலகம் பத்திரிகைக்கு உதவி ஆசிரியராக அழைத்துக் கொண்டார். உரியகாலத்தில் சக்திதாசன் சுப்பிரமணியம் இலங்கையிலிருந்து திரும்பினார். மகிழ்ச்சியோடு காணப்பட்டார். இதழ் வேலைகள் உற்சாகமாக நடைபெற்றன. ராதாமணி அம்மையார் கூடப் பத்திரிகை வளர்ச்சி குறித்துப் பெரும்கனவுகளுடன் திட்டமிடுவார். ஜனவரி இதழ் வந்தது. பிப்ரவரி இதழுக்கான வேலைகள் தொடர்ந்தன. நான் தயங்காது காலம் கடத்தாது. துறையூருக்கு வந்துவிடவேண்டும் என்று திருலோகம் கடிதங்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.