பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}: வாழ்க்கைச் சுவடுகள் வருவது நல்ல கவனிப்பும் பெற்றுவருகிறது. நான் கிராமஊழியனுக்குப் போவதே நல்லது என்று முடிவு செய்தேன். என் எண்ணத்தை டி.கே. சண்முகத்துக்கு எழுதித்தெரிவித்தேன். மறுவாரம் சென்னைக்கு வந்த சண்முகமும் டி.கே. பகவதியும் நவசக்தி அலுவலகம் வந்து என்னைச் சந்தித்தார்கள். 'நீங்கள் நாடகத்தைச் சாகடித்துவிட்டீர்கள். நாடகம் இதழைக் கருவிலேயே சிதைத்து விட்ட பாடம் உங்களையே சேரும் என்று சண்முகம் சிரித்துக்கொண்டே சொன்னார். 'உங்கள் துணையோடு நாடகம் இதழைச் சிறப்பாகக் கொண்டு வரமுடியும் என்று எண்ணினோம். நீங்கள் வரவில்லை என்றதுமே எங்கள் நம்பிக்கை தளர்ந்துவிட்டது. அதனாலே இப்போதைக்குப் பத்திரிகை ஆரம்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம் என்றும் அவர் விவரித்தார். 'உங்கள் எழுத்தார்வத்துக்கும் திறமைக்கும் இலக்கியப் பத்திரிகையில் சேர்ந்து உழைப்பதுதான் நல்லது கிராம ஊழியன் உங்களுக்கு ஏற்ற இடம் தான்' என்று கூறி வாழ்த்தி விட்டுச் சென்றார் சண்முகம். பிப்ரவரி கடைசி வாரத்தில் அ.வெ.ர.கி. ரெட்டியார் சென்னைக்கு வந்தார். டவுணுக்குப் போய் அச்சு எழுத்துகளுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும். பிளாக் செய்யும் கம்பெனிக்கும் போக வேண்டும். சாயங்காலம் ரயிலுக்குப் போகத் தயாராக இருங்கள் என்று என்னிடம் தெரிவித்தார். சக்திதாசன், ராமநாதன் இருவரிடமும், கிராம ஊழியனுக்குச் சரியான உதவி ஆசிரியர் இல்லை. வல்லிக்கண்ணனை அழைத்துப் போகலாம் என்று எண்ணம். இங்கு தான் அவருக்கு வேலை இல்லையே இன்று சாயங்காலம் அவர் என்னோடு வரட்டும் என்று கூறினார். அலுவல்களைக் கவனிக்கக் கிளம்பினார். - சக்திதாசன் மறுக்கவில்லை. அப்படியே செய்யுங்க என்று இசைவு தெரிவித்தார். ரெட்டியார் போனதும். நீங்க துறையூர் போகிறீர்களா?' என்று என்னைக் கேட்டார், சக்திதாசன். நான் என் நிலையைச் சொன்னேன். கிராம ஊழியன் உங்களுக்கு ஏற்ற இடம் தான். இருந்தாலும் நீங்கள் இவ்வளவு விரைவில் பிரிந்து போவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. நவசக்தியை இன்னும் சிறப்பாகக் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசை எனக்கு ராமநாதன் இப்போதைக்கு இங்கே இருக்கிறார். சீக்கிரமே அவர் வேறிடம் போய் விடுவார். உங்கள் துணையோடு இதழை மேம்படுத்தலாம்