பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் {{}3 என்று எண்ணியிருந்தேன். நீங்கள் இப்பவே போகிறேன் என்கிறீர்கள். சரி, போய்வாங்க. உங்கள் எதிர்காலம் வெற்றிகரமானதாக விளங்கட்டும் என்று சோகத்தோடு சொன்னார் நண்பர். மாலையில் ரெட்டியார் வந்து என்னை அழைத்துக் கொண்டு சென்றார். 16 நான் சென்னையில் முழுமையாக மூன்று மாதங்கள் தங்கியிருக்கவில்லை. அதற்குள் நவசக்தியைப் பிரிந்து செல்ல வேண்டிய ஒரு அவசியத்தைக் காலம் ஏற்படுத்திவிட்டது. எனது வளர்ச்சிப் பாதையில் என் முன்னேற்றத்துக்குக் காலம் நன்கு உதவி வந்துள்ளது என்றே சொல்லவேண்டும். - 1944 பிப்ரவரி இறுதியில் அவெர.கி. ரெட்டியார் என்னைத் துறையூரில் கொண்டு சேர்த்தார். துறையூர், திருச்சிராப்பள்ளியில் இருந்து 28 மைல்கள் தள்ளி அமைந்துள்ள ஒரு சிற்றுர். இப்போது, எல்லா இடங்களையும் போல, அந்த ஊரும் வேகமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் அது சாதாரணமாகவே தோற்றம் கொண்டிருந்தது. துறையூரில் இருந்து கிராம ஊழியன் என்கிற மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறைப் பத்திரிகை வெளியிடப் போகிறோம். அதற்கு உங்கள் வாழ்த்து வேண்டும் என்று கு.ப. ராஜகோபாலனும், திருலோக சீதாராமனும் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரை அணுகிய போது துறையூரிலிருந்தா? அந்த ஊரில் தபாலாபீஸ் இருக்கிறதா என்ன? என்று அவர் கேட்டாராம். அவ்வளவுக்குச் சாதாரண ஊராக இருந்தது அது. கிராம ஊழியன் அச்சகம், பெரிய கொட்டகை போன்ற நீளமான ஒட்டுக் கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அதன் ஓர் ஓரத்தில் ஒரு சிறு அறை உண்டு. நீண்ட கொட்டகையில்தான் ட்ரெடில் மிஷின், சிலிண்டர், அச்சு எழுத்துக்கள் கொண்ட ஸ்டாண்டுகள், மற்றும் அச்சாபீசுக்கு உரிய சகல சாமான்களும் இருந்தன. பத்திரிகை அச்சிடுவதுடன் வேறு பல வெளிவேலைகளையும் ஏற்றுச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அச்சுக் கோப்பவர்கள் (கம்பாசிட்டர்ஸ் டிரெடில் மேன், சிலிண்டர் ஒட்டுகிறவர்கள், எடுபிடிப் பையன்கள் என்று ஆட்கள் பலர் வேலையில் இருந்தார்கள். ரெட்டியாரும் திருலோகமும் நிர்வாக வேலைகளைக் கவனித்தார்கள். பத்திரிகைக்கு உதவிஆசிரியராக நான் அமர்த்தப்பட்டேன். இதுவரை நான் பணிபுரிந்த பத்திரிகைகளில் எனக்கு மாதச் சம்பளம் இவ்வளவு என்று பேசப்பட்டதுமில்லை; நியமன உத்திரவு என்று எதுவும் தரப்பட்டதுமில்லை. இங்கே இவை கிட்டின.