பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}డ్జ வாழ்க்கைச் சுவடுகள் உதவி ஆசிரியராக இன்ன தேதியிலிருந்து நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற அட்டாயின்ட்மென்ட் ஆர்டர் என்னிடம் தரப்பட்டது. சம்பளம் மாதம் 25 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டிடத்திலேயே நான் தங்கிக்கொண்டேன். - கிராம ஊழியன் ஒரு வருட காலம் சிறுஅளவு கிரவுன் சைஸ்) பத்திரிகையாக வெளிவந்தது. 1944 ஏப்ரல் முதல் அதைப் பெரிய அளவில் (டெமி சைஸ் ஆனந்த விகடன் மாதிரி கொண்டு வருவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. கு.பாரா. கும்பகோணத்திலிருந்து நிறையவே விஷயங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். கதை, கட்டுரை, நாடகம், மகாராஷ்டிர வீரன் சிவாஜியின் வரலாறு என்று பலவகைப்பட்டவை. மற்றும் தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு நாராயணசாமி, கி.ரா. கோபாலன், எம்.வி. வெங்கட்ராம் என்று பலபேர்களிடமிருந்தும் விஷயங்கள் வாங்கிஉதவினார். கும்பகோணம் ஓவியக் கலைக்கல்லூரியில் பயின்றுவந்த கோபுலு, ஸாரதி போன்றவர்களிடம் சித்திரங்கள் தீட்டச் சொல்லி அவற்றையும் அனுப்பிக் கொண்டிருந்தார். மார்ச் மாதம் கு.ப.ரா. துறையூர் வந்தார். பணஉதவி பெற்றுப் போகலாம் என்று. ஆனால் அவர் எண்ணம் ஈடேறவில்லை. ஏமாற்றத்துடன் ஊர் திரும்ப நேர்ந்தது. அதற்குப் பிறகு அவர் வரவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் நான் கு.ப.ரா.வைப் பார்த்ததுதான். அதுவே முதலும் கடைசியுமான சந்திப்பாக அமைந்துவிட்டது. ஏப்ரல் மாதம் அவர் இறந்துவிட்டார் என்ற தகவல் வந்தது. குயராவைப் பார்ப்பதற்கு முன்னதாக, ந. பிச்சமூர்த்தியைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்நாட்களில் ந. பிச்சமூர்த்தியும் குயராஜகோபாலனும் மறுமலர்ச்சி இலக்கிய இரட்டையர்' என மதிக்கப்பட்டுவந்தார்கள். இருவரும் ஒன்றாகக் கும்பகோணத்தில் வசித்ததும் ஒரு காரணம் ஆகும். இருவரும் மணிக்கொடி எழுத்தாளர்கள். இருவரும் தமிழில் புதுமுயற்சியான வசன கவிதை'யில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். கால ஓட்டத்தில், ந. பிச்சமூர்த்தி, வாழ்க்கை நிர்ப்பந்தம் காரணமாக, வேலை பார்ப்பதற்கென்று வெளியூர் சென்று வெவ்வேறு ஊர்களில் வசிக்க நேரிட்டது. கிராம ஊழியன் காலத்தில் ந. பிச்சமூர்த்தி, துறையூருக்கு அருகில் உள்ள செட்டிகுளம் என்ற ஊரில் கோயில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். கோயில் சம்பந்தமான வழக்குகள் துறையூர் முனிசீப் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வரும். அதற்காக அவர் அடிக்கடி துறையூருக்கு வந்துபோக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் அவர் ரெட்டியார் வீட்டில் தங்கினார். கிராம ஊழியன் அலுவலகம் வந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.