பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}{3 வாழ்க்கைச் சுவடுகள் அங்கீகரிக்கவில்லை. மிகக் கடுமையாக வரிகள் விதித்தது. அவர் வரி கட்ட மறுத்தார். இறுதியில், அவரது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் சுத்தியலால் அவரே அடித்து நொறுக்கி அழித்தார். அப்படி அழித்து ஒழிப்பதற்கு முன்னதாக அவற்றை ஒரு கண்காட்சியாக்கி மக்களின் பார்வைக்கு வைத்தார். 'அழிப்பதற்காகவே செய்யப்பட்ட ஆக்கங்கள் என்று அந்தக் காட்சியில் அனைத்துப் பொருள்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. (CONSTRUC. TIGN FOR DESTRUCTION) அந்த அதிசய மனிதர் எழுத்தாளர்களுக்கு நல்லாதரவு அளித்து வந்தார். எழுத்தாளர்களின் முதலாவது மாநாடு நடைபெற அவர் பெரிதும் உதவினார். கோவை நகர எழுத்தாளச் சகோதரர்கள் ஆர். சண்முகசுந்தரம், ஆர். திருஞானசம்பந்தம் இருவரும்தான் முன்முயற்சி எடுத்து, இம் மாநாடு வெற்றிகரமாக நிகழப் பாடுபட்டார்கள். முதல் எழுத்தாளர் என்று அந்நாட்களில் பெருமைப்படுத்தப்பட்டிருந்த வ.ரா. மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். தினசரி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் சிறப்புரை ஆற்றினார். எழுத்தாளர்கள் பலர் பேசினர். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எழுத்தாளர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே அறிமுகம் செய்து கொண்டது மாநாட்டின் சுவாரசியமான சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. அனைத்துப் பத்திரிகைகளும் மாநாடுபற்றிப் பிரமாதமாக எழுதிப் பெருமை சேர்த்தன. - அந்த மாநாட்டின் மேடையில் நின்று திருலோக சீதாராம்புதுமைப்பித்தனின் ஓடாதீர் கவிதையை முழக்கமிட்டார். ஒகோ, உலகத்தீர் ஓடாதீர் உம்மைப் போல் நானும் ஒருவன் காண்' என்று எழுத்தாளன் அறிவிப்பு செய்யும் கவிதை, குத்தலும் நையாண்டியும் சாடலும் நிறைந்தது. முடிவில் அது விடுத்த கோரிக்கை 'இத்தனைக்கும் மேலே இன்னொன்று நான் செத்ததற்குப் பின்னால் நிதிகள் திரட்டாதீர்! நினைவை விளிம்பு கட்டி, சிலைகள் செய்யாதீர்' இந்தக் கவிதைக்கும் திருலோகம் அதைப்பாடிய தோரணைக்கும் பிரமாத வரவேற்பு இருந்தது. இது யார் பாடியது என்று வரா. கேட்டார். வேளுர் வெ. கந்தசாமிக் கவிராயர் என்ற திருலோகம் மிடுக்காகப் பதில் கூறவும், வ.ரா. திகைப்பு அடைந்தார். யார் அது? யார் அது? என்று திரும்பத்