பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 111 அறிவிக்கப்பட்டது. கும்பகோணம் எழுத்தாளர்கள் எழுதவில்லை. புதிதாகச் சிலர் தொடர்ந்து எழுதலானார்கள். ராசிபுரம் தனுஷ்கோடி, தி.க, சிவசங்கரன், என் அண்ணா அசோகன், சுப. நாராயணன், வானொலியில் பணிபுரிந்த குகன், சிட்டி என்று பலர். திருச்சி ரேடியோ நிலைய உதவி இயக்குநர் கு.ப. ரங்காச்சாரி, பராங்குசம் என்ற பெயரில் புதுமையான சிறுகதைகள் எழுதி உதவினார். நான் அதிகம் எழுத நேர்ந்தது. வெவ்வேறு புனைபெயர்களில், வித்தியாசமான நடைகளில் கதை, கட்டுரை, கவிதை என்று எழுதிக் கொண்டிருந்தேன். பாரதியின் வசனகவிதைப் படைப்புகளான காட்சிகள் பாணியில், 'பாரதி அடிச்சுவட்டில்' என்ற தலைப்பில், இளவல் எனும் புனைபெயரில், நான் இதழ் தோறும் எழுதினேன். இவை மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுத்தந்தன போலவே கண்டனங்களையும் குறைகூறல்களையும் எதிர்கொண்டன. புத்தக மதிப்புரை கிராமஊழியனின் சிறப்பான அம்சமாக விளங்கியது. ஆகவே மதிப்புரைக்காகப் பல்வேறு பதிப்பகங்களும் புத்தகங்கள் அனுப்பிக் கொண்டிருந்தன. தி.க.சி. துருவன் என்ற பெயரில் திரைப்பட விமர்சனங்களைச் சூடும் சுவையுமாக எழுதி வந்தார். முச்சந்தி என்ற பகுதியில் பிள்ளையார் விவாதத்துக்கு உரிய பிரச்சினைகளை வெளியிட்டார். பிள்ளையார் என்பது எனது புனைபெயர்களில் ஒன்று. ரெட்டியார், கண்ணன், அ.வெ.ர.கி, தேவராய பூபதி என்ற பெயர்களில் அ.வெ.ர.கிருஷ்ணசாமி எழுதினார். கிராம ஊழியன் இதழ்கள் முக்கியமான எழுத்தாளர்கள். பத்திரிகைக்காரர்கள், புத்தக வெளியீட்டாளர்களுக்கெல்லாம் இலவசமாக அனுப்பப்பட்டன. அதனால் எங்கள் எழுத்துக்கள் மிகப் பலரது கவனத்துக்கும் உரியனவாயின. இச் சந்தர்ப்பத்தில், டி.கே.எஸ். சகோதரர்களின் சண்முகானந்த சபா திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தியது. புதிய நாடகங்களை அரங்கேற்றியது. நாரணதுரைக்கண்ணன் எழுதிய உயிரோவியம்', . நீலகண்டன் நாடகம் முள்ளில் ரோஜா, ஆதிமூலம் எழுதிய மனிதன்' கி.ஆ.பெ.விசுவநாதம், ரா. வேங்கடாசலம் எழுதிய நாடகங்கள் என்று பல புதிதாக மேடை ஏற்றப்பட்டன. ஏற்கெனவே அவர்களுக்குப் பெயர் வாங்கித்தந்திருந்த ஒளவையார், சிவலீலா முதலிய நாடகங்களும் நடிக்கப் பெற்றன. நடிகர் டி.கே. சண்முகம் இலக்கிய ரசிகர். பல்வேறு நூல்களையும் விரும்பிப் படிப்பவர். எழுத்தாளர்களின் நண்பர். அவர் எனது அன்புச் சகோதரர் ஆகியிருந்தார். அடிக்கடி சுவாரசியம் மிகுந்த கடிதங்கள் எழுதிக்