பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌盟忽 வாழ்க்கைச் சுவடுகள் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாடக மாற்றத்தின் போதும் அவர் எனக்குப் பணம் அனுப்பி, அந் நாடகத்தைக் கண்டு மகிழ என்னைத் திருச்சிக்கு வரவழைப்பதை வழக்கமாகக்கினார். நான் பார்த்த நாடகங்கள்பற்றி ஊழியனில் விரிவான கட்டுரைகள் எழுதினேன். அவை வாசகர்களால் விரும்பி வரவேற்கப்பட்டன. நாடகம் பற்றிக் கிராம ஊழியனில் எழுதியதால், நவாப் ராஜமாணிக்கமும் அவரது தேவி நாடகசபை முகாமிட்ட ஊர்களுக்கு வந்து நாடகங்களைப் பார்க்கும்படி அழைப்பும் பணமும் அனுப்பினார். அப்படி திருவனந்தபுரம், கொல்லம் கல்லிடைக்குறிச்சி ஊர்களுக்குப் போய் நவாபின் நாடகங்களைப் பார்த்தேன். அவை பற்றியும் கட்டுரைகள் எழுதினேன். கிராம ஊழியன் விற்பனையாளர்கள் மூலம் பல முக்கிய ஊர்களில் விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் அதிகமான விற்பனை அதற்கு இருந்ததில்லை. ஆயிரம் பிரதிகளுக்குள்ளேதான் அது அச்சாயிற்று. சுப. நாராயணன் கட்டுரைகள் தனித்தன்மையுடன் இருந்தன. அவர் நல்ல சிந்தனையாளர். சக்தி'யில் வேலை பார்த்தார். தி.ஜ ரங்கநாதன் அதன் ஆசிரியர் பதவியில் இருந்து விலகி, மஞ்சரி பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும். சுப. நாராயணன் சக்தி ஆசிரியரானார். அப்பொழுதும் அவர் ஊழியனின் ஒவ்வொரு இதழுக்கும் கட்டுரை எழுதி அனுப்பினார். சக்தி'க்கு மாதம்தோறும் நான் கதை எழுதித் தர வேண்டும் என்று கேட்டு வாங்கி என் எழுத்துக்களை வெளியிட்டார். எழுத வேண்டும்-புதிது புதிதாக எழுத வேண்டும்- என்றொரு வேகம் என்னுள்ளிருந்து என்னை இயக்கிக் கொண்டிருந்தது. கிராம ஊழியன் இதழ்களுக்காக எழுதியதுடன், சக்திக்கும் சிவாஜிக்கும் வேறு சிலஇதழ்களுக்கும் எழுதிக் கொண்டிருந்தேன். அதிகமாக எழுத வேண்டும் என்பதற்காக இதய ஒலி என்கிற எனது கையெழுத்து மாத இதழையும் விடாது வளர்த்தேன். - இதய ஒலி பற்றி அறிய நேர்ந்த ந.பிச்சமூர்த்தி, நீங்கள் ஏன் உங்கள் திறமையையும் காலத்தையும் உழைப்பு சக்தியையும் வீணடிக்கிறீர்கள்?' என்று கேட்டார். எங்கே இதய ஒலியைப் பார்க்கலாம் என்று கேட்டு வாங்கிப் படித்துப்பார்த்தார். ரசித்துப் பாராட்டினார். 'நன்றாகத் தான் தயாரிக்கிறீர்கள். கையெழுத்துப் பத்திரிகை என்றாலும் தரமான இதழாக இருக்கிறது. இதைப் பார்க்கையில் இதைப் பூக்குடலை என்று சொல்லலாம்போல் தோன்றுகிறது. பூக்காரன் பூக்களைச் சரங்களாகவும் ஆரமாகவும் செண்டாகவும் கட்டிக் குடலைக்குள் வைத்துப் பாதுகாக்கிறான். அப்புறமாக அவற்றை விநியோகிக்கிறான். வீடுகளுக்கும் கடைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் வழங்குகிறான். அதே மாதிரி உங்கள்