பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 魔讃5 சாயையுடன் நின்றது. துறையூர் ஜமீன்தார் வசமிருந்தது. அழகு ரசிகரும் உல்லாசியுமான ஒரு ஜமீன்தார் ஒரு காலத்தில் ஏரி நடுவில் ஒரு கட்டிடம் கட்டிவைத்தார். ஏரியில் நீர் நிறைந்திருந்த நாட்களில் அவர் தோணியில் அமர்ந்து சுற்றி மகிழ்வார். பெளர்ணமி நாட்களில், செஜ்ஜை' என்கிற அந்தக் கட்டிடத்தில் உல்லாசமாகப் பொழுதுபோக்குவார் என்று சொல்லப்பட்டது. நாமும் செஜ்ஜையில் போய், ஒரு நிலாராத்திரி, சந்தோஷமாகப் பொழுதுபோக்கலாமே! சித்திரான்னங்கள் தயாரித்துக் கொண்டு போய்ச் சாப்பிட்டு மகிழலாம் என்று அச்சுக் கோக்கும் தொழிலாளர்கள், சும்மா ஜாலியாகப் பேசினார்கள். ஆனால் ரெட்டியார் அதைச் செயல்படுத்த முன்வந்தார். அவருடைய கிராமத்தைச் சேர்ந்த மூன்று நண்பர்களும் சேர்ந்துகொண்டார்கள். அப்போது ஏரியில் தண்ணீர் இல்லை. நல்ல நிலாக்காலம் பதினைந்து பேர் செஜ்ஜை கட்டிடத்தில் புகுந்தோம். இருளைப் போக்க 'கியாஸ்லைட்' (GAS LIGHT) உதவியது. ருசிருசியான தின்பண்டங்களும் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டன. உற்சாகமாகப் பேசியும் பாடியும் சந்தோஷமாக இருந்தார்கள் எல்லோரும். - என்றும் இல்லாத அதிசயமாக, திடீரென்று. செஜ்ஜையில் பளிர் வெளிச்சமும், ஆட்கள் நடமாட்டமும் பேச்சொலிகளும் நிலவுவதைக் கண்ட ஊர்க்காரர்கள் என்னவோ ஏதோ என்று திடுக்கிட்டார்கள். விஷயம் அறிந்த ஒருவர், ஊழியன் பிரஸ் ரெட்டியாரும் அவருடைய ஆட்களும் செஜ்ஜையில் கூடி உல்லாசமாகப் பொழுது போக்குகிறார்கள் என்று தெளிவுபடுத்தவும் மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு சமயம் ரெட்டியார் மற்றும் பலரையும் அழைத்துக்கொண்டு கொல்லி மலைக்குப் போனார். துறையூரிலிருந்து சில மைல் தூரத்தில் உள்ளது கொல்லிமலை, கிராமவாசிகள் அடிக்கடி அங்கே போய்வருவது வழக்கம். ரெட்டியாரின் கிராமத்து நண்பர்கள் தூண்டிவிட, ரெட்டியார் எங்களை அழைத்துக்கொண்டு மலைமீது யாத்திரை போய் வந்தார். அங்கே வனபோஜனம் உண்டு மகிழ்ந்தோம். 18 என் எழுத்துக்கள் டத்திரிகைகளில் வந்தன. அச்சின் வராமல் கையெழுத்து நிலையிலும் ஏகப்பட்டவை இருந்தன. நான் மேலும் மேலும் எழுதிக் கொண்டிருந்தேன் கடிதங்கள் நிறைய எழுதினேன். 'நீங்கள் கடிதங்களுக்காக அதிகம் செலவிடுகிறீர்கள். உங்கள் சம்பளத்தில் பாதி தடால் செலவிலேயே காலியாகிறது. இது அவசியமா? என்று ஒருமுறை நண்பர் திருலோக சீதாராம் என்னைக் கேட்டார்.