பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 諏? அனுப்பினேன். அணையா விளக்கு என்று பெயர் வைக்கலாம் என்று தெரிவித்தேன். அந்த விளக்கு ஏற்றப்படவேயில்லை நான் துறையூர் சேர்ந்ததும் பாரத மாதா பிரசுரம் கருப்பையாவைச் சந்தித்தேன். என் கதைகள் பற்றி விசாரித்தேன். கண்டிப்பாக அவற்றைப் புத்தகமாக்கிவிடுவேன். இப்ப கொஞ்சம் பணக்கஷ்டம், பொருளாதாரநிலை சரிப்பட்டதும் முதலாவதாக அணையா விளக்கைக் கொண்டு வந்து விடுவேன்' என்று அவர் உறுதிகூறினார். ஆனாலும், அவருடைய பொருளாதார நிலைமை சீர்படவுமில்லை. எனது அணையா விளக்கு வெளிச்சத்தைப் பார்க்கவுமில்லை. கடை விரித்தேன், கொள்வாரில்லை, கட்டிவிட்டேன்' என்று கூறிய வள்ளலார் இராமலிங்கர் காட்டியவழியைத்தான் பாரதமாதா பிரசுரம் அதிபர் கருப்பையாவும் பின்பற்ற வேண்டியதாயிற்று. சரி. காலம் வரும், காத்திருப்போம் என்று எண்ணியபடி நான் எழுதிக் கொண்டிருந்தேன். கோயம்புத்துரில் சினிமா உலகம் பத்திரிகையைக் கவனித்துவந்த எஸ்.பி. கிருஷ்ணன்-ஆசிரியர் பி.எஸ். செட்டியாரின் உறவினர் - ஏதாவது பிசினஸ் பண்ணனும் என்று ஆசைப்பட்டார். அவரது நண்பர் ஒருவரும் கூட்டுச் சேர்ந்தார். புத்தகங்கள் வெளியிடலாம் என்று தீர்மானித்தார்கள். முதலில் எனது சிறுகதைகளை ஒரு புத்தகமாக்க விரும்பினார்கள். நான் பன்னிரண்டு கதைகள் அனுப்பிவைத்தேன். 'கல்யாணி முதலிய கதைகள்' என்று பெயர் சூட்டலாம் என்றும் தெரிவித்தேன். கல்யாணி என்ற அழகான பெயருக்கு ஏற்றபடி அழகும் வசீகரமும் நிறைந்த அட்டைப் படம் அமைக்கமுடியும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. சில மாதங்களில் புத்தகம் தயாராகி வெளிவந்துவிட்டது. ஆனால் அதன் அட்டைச் சித்திரமும் அமைப்பும் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. எப்படியோ, எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். 1944இல் அது நிகழ்ந்தது. 1945இல் எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான நாட்டியக்காரி வெளிவந்தது. இது வெளிவர நேர்ந்ததும் விநோதமான ஓர் அடிப்படையிலேதான். நான் திருநெல்வேலியில் வசித்த நாட்களில், எனக்கு நண்பர்களான இளைஞர்களில் எஸ். சிதம்பரம் என்பவரும் ஒருவர். கல்லூரி மாணவர். தி.க.சி.யின் நண்பர். செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. அவர் தந்தை திருவனந்தபுரத்தில் பிரபல வைரவியாபாரி. அவருக்குச் சொத்து நிறைய. அனைத்துக்கும் வாரிசு ஒரே மகனான சிதம்பரம்தான். அவருடைய சித்தப்பாவுக்குப் பிள்ளை இல்லை. அவரது சொத்துகளுக்கும் சிதம்பரம்தான் வாரிசு என்ற நிலை இருந்தது. அவர் உல்லாசி, ஜாலி பிரதர். கவிஞர்