பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{8. வாழ்க்கைச் சுவடுகள் பாரதிதாசன் அறிமுகம் செய்துள்ள காற்றடிக்கும் சோலையிலே கனி அடித்துத் திரிகின்ற செல்லப்பிள்ளை இனம் இந்தச் சிதம்பரம். - கல்லூரிப் படிப்பை அரைகுறையாக விட்டுவிட்ட பிறகு வாழ்க்கையில் ஏதாவது பண்ணி எப்படியாவது பெயர் பெறவேண்டும் என்ற ஆசை சிதம்பரத்துக்கு ஏற்பட்டது. அவருடைய நண்பர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். ஒருவர் சொன்ன யோசனை சிதம்பரத்துக்குப் பிடித்திருந்தது. அவருக்கு ஓரளவு இலக்கிய ஈடுபாடும் எழுதும் திறமையும் இருந்ததால், 'உன்னுடைய எழுத்துக்களைப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும். அதற்கு முன்னதாகக் கவனிப்புப் பெறுவதற்காக எழுத்துலகில் பெயர் பெற்றுள்ள ஒருவரின் எழுத்துக்களைப் புத்தகமாக வெளியிட வேண்டும். அதன் பக்கபலத்தில் உனது புத்தகங்களும் கவனிப்புப் பெறும் என்பது அந்த நண்பரின் யோசனையாகும். யோசித்த சிதம்பரத்துக்கு அந்த யோசனை நல்ல வழி என்று பட்டது. தமக்குத் துணைவரக்கூடிய - பெயர்பெற்ற எழுத்தாளராக யாரை அணுகலாம் என்று அவர் நினைத்துப் பார்த்தார். வல்லிக்கண்ணன் நினைவு அவருக்கு வந்தது. நேரே அவர் துறையூர் வந்து சேர்ந்தார். நான் அவருக்குக் கதைகள் கொடுத்தேன். நாட்டியக்காரி என்ற கதைத் தொகுப்பை அவர் கவிக்குயில் நிலையம் வெளியீடாகக் கொண்டு வந்தார். கூடவே தமது கவிதைகளைக் 'காதலிக்கு என்ற தொகுப்பாகப் பிரசுரித்தார். அவருடைய கவிதைகள் தொடர்ந்து கிராம ஊழியன் இதழ்களில் இடம் பெற்றன. வைரம் என்ற புனைபெயரிலும் எஸ். சிதம்பரம் எழுதினார். மேலும் கவனிப்பு பெறுவதற்காக இலக்கிய மலர் வெளியிடலாம் என்று அவரிடம் சொன்னேன். கவிக்குயில் மலர் தயாரிப்பதில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். அவருக்காக, முக்கிய எழுத்தாளர்கள் பலருக்கும் நானும் கடிதங்கள் எழுதினேன், மலருக்கு விஷயங்கள் கேட்டு. எழுத்தாள நண்பர்கள் அன்புடன் ஒத்துழைத்தார்கள். கவிக்குயில் முதல் மலர் நன்கு உருவாகி வெளிவந்தது. அதில் என்னுடைய எழுத்துக்கள் அதிகம் இருந்தன. மலரின் சிறப்பைக் கண்ட எழுத்தாளர்கள் இரண்டாவது மலருக்கு உற்சாகத்துடன் உதவினார்கள். புதுமைப்பித்தன் கவிதைகள் கொடுத்தார். இரண்டாவது மலர், முதல் மலரை விடச் சிறப்பாக அமைந்திருந்தது. இவ் இரண்டு மலர்களும் திருவனந்தபுரத்தில் இருந்துதான் வெளியிடப்பட்டன. சிதம்பரத்தின் உற்சாகமும் ஆர்வமும் திசைமாறிப் போயின. அவருக்குத் திருமணமாகிக் குழந்தைகள் இருந்தன. ஆயினும் செல்வப்பெருக்கு அவரை விபரீத வழிகளில் செல்லத் தூண்டியது. திருவனந்தபுரத்தில் அவருக்குச் சேர்ந்த நண்பர்களும் அப்படிவந்து