பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் f{9 வாய்த்தார்கள். இலக்கியத்தில் இருந்து அவர் கவனம் போட்டோக்கலை பக்கம் திரும்பியது. படங்கள் எடுத்து முன்னேற வேண்டும் என்று அவர் ஏராளமாகப் பணம் செலவு செய்தார். அவரது நல்ல உள்ளம், திருவனந்தபுரத்தில் வந்து தங்கிய புதுமைப்பித்தனுக்கு அவருடைய இறுதிக்காலத்தில் தாராளமாக உதவிகள் புரிய இடமளித்தது. புதுமைப்பித்தனின் மரணம் வரை அவர் கூடவே இருந்து தேவைப்பட்ட உதவிகளைச் செய்தார் சிதம்பரம் அந்தச் சோக நாட்கள் பற்றியும் புதுமைப்பித்தனின் இறுதிச் சட்ங்குகள் குறித்தும் சிதம்பரம் உருக்கமான ஒரு கட்டுரை எழுதினார். அது கு. அழகிரிசாமியும் ரகுநாதனும் ஆசிரியர்களாகப் பணியாற்றிய சக்தி மாத இதழில் வெளி வந்தது. பிற்காலத்தில் வேறு இடங்களிலும் அக் கட்டுரை மறுபிரசுரம் பெற்றது. நல்ல கலைஞனாக, கவிஞனாக, வளர்ந்திருக்க வேண்டிய எஸ். சிதம்பரம் அவருடைய இயல்புகளினாலும் விபரீதப் போக்குகளினாலும் பாழாகிப்போனார். அவருடைய போக்குகளைச் சகிக்க முடியாத அவரது சித்தப்பா தமது சொத்துக்களுக்கு வாரிசாக ஒரு தத்துப் பிள்ளையை வரித்துக் கொண்டார். சிதம்பரத்தின் அப்பாவும் தமது பேரக்குழந்தைகளைத் தம் சொத்துக்களுக்கு உரிய வாரிசுகள் என்று பதிவு செய்துவிட்டார். விரக்தி அடைந்த சிதம்பரம் பெங்களுரில் தங்கித் தறிகெட்ட முறையில் வாழ முயன்றார். சினிமா போட்டோகிரபி பயிற்சி பெறுகிறேன் என்று பணத்தை வீண்செலவுகளில் வாரி இறைத்தார். சரத் சந்திரரின் கதாபாத்திரமான தேவதாஸ் மாதிரி, சதா குடித்துக்குடித்து தம்மை மறந்த நிலையில் திரிந்து முடிவில் செத்துப் போனார், அனுதாபத்துக்கு உரிய நண்பர். அவருடைய நினைவு என்றும் என் உள்ளத்தில் அழிக்க முடியாத சோக நிழலாய்ப் பதிந்திருக்கிறது. எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்ததை ஒட்டிய சோக வரலாறு இது. மூன்றாவது புத்தகம் தான் 'பாரதிதாசன் உவமை நயம். முல்லை முத்தையா, கமலா பிரசுரம் வெளியீடாகப் பிரசுரித்தார். உங்கள் எழுத்துக்களை நீங்களே புத்தகங்களாக வெளியிடலாமே என்று அச்சகத் தோழர்கள் ஊக்குவித்தார்கள். புத்தகங்கள் பிரசுரிப்பது பற்றி நான் பெரிய கனவுகளை வளர்த்துவந்தேன். அவற்றைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார வசதிகள் இல்லை. இருப்பினும் சிறுசிறு பிரசுரங்கள் வெளியிடலாம் என்ற எண்ணம் எழுந்தது. முதலில், புதுமையாக இருக்கும் என்ற நினைப்புடன் நையாண்டி பாரதி எழுதிய நாவல் குஞ்சாலாடு அச்சாயிற்று. சாந்தி நிலையம் வெளியீடு என்ற முத்திரையுடன்,