பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 வாழ்க்கைச் சுவடுகள் கிராம ஊழியன் அச்சகத்திலேயே அது தயாராயிற்று. அச்சுக் கூலி, காகிதச் செலவு முதலியவைகளில் ரெட்டியார் தாராள சலுகை காட்டி உதவினர். அச்சுத் தோழர்கள் உற்சாகமாக வேலை செய்தார்கள். குஞ்சாலாடு நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து. சிந்தனை விழிப்பூட்டும் சிறு பிரசுரங்களை வெளியிட வேண்டும் என்று எண்ணினேன். தமிழ்நாட்டில் சிந்தனை விழிப்பு ஏற்பட்டு வளர்ந்து கொண்டிருந்த காலம் அது பெரியார் ஈ.வெ.ரா.வின் சூடும் சுவையும் நிறைந்த சொற்பொழிவுகள், கட்டுரைகள், சி.என். அண்ணாதுரையின் எழுத்துக்கள் மற்றும் திராவிட இயக்க இளைஞர்களின் எழுத்துக்கள். பொதுஉடைமை இயக்கச் சிந்தனை வெளியீடுகள், பல்வேறு பத்திரிகைகள் எல்லாம் மக்களுக்கு அறிவுச் சுடர் ஏற்றி வந்தன. எந்த இயக்கத்திலும் சேர்ந்திராத எழுத்தாளர்களும் சுயசிந்தனை வெளிப்பாடுகளாகவும் அனுபவப் பும் கட்டுரைகள், கதைகள், புத்தகங்கள் எழுதிக்கொண்டிருந் தா: சாதி, மதம், கடவுள்கள் பெயரால் நாட்டில் பரவி வந்தள்ள ங்கள், அநியாயங்கள். மூடநம்பிக்கைகள் முதலியவற்றை ينتج: نينتي வெளிப்படுத்தும் தன்மையில் அவை இருந்தன. சமூகத்தில் ஏற்றம் பெற்றுள்ளவர்களின் மனிதநேயமற்ற செயல்களையும், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டோரின் அவலநிலைமையையும் எடுத்துச் சொல்லின. புதுமைப்பித்தன் கதைகள், பாரதிதாசன் கவிதைகள், தேசிகவிநாயகம் பிள்ளையின் கவிதைக் கருத்துக்கள் இந்த விதமான சிந்தனை ஒளியைப் பரப்பின. 'கோவைகிழார்' என்ற பெயரில் சி.எம்.ராமச்சந்திரன் செட்டியார் என்ற எழுத்தாளர், அறநிலையத் துறையில் பணிபுரிந்த காலத்தில், பல ஊர் கோயில்களிலும் கண்டறிந்த சிறுமைச் செயல்களையும் சீர்குலைவுகளையும் சுவாரசியமாக வெளிச்சப்படுத்தியிருந்தார் கோயில் பெருச்சாளிகள்' என்ற புத்தகத்தில் - இவற்றால் எல்லாம் தாக்கம் பெற்றிருந்த நானும் கோயில்களை மூடுங்கள் என்ற சிறுபுத்தகத்தை எழுதினேன். இலக்கிய ஆதாரங்களையும், சமூக நடவடிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட சிந்தனை நூல் அது கோரநாதன் எழுதியது - சாந்தி நிலைய வெளியீடு எனப் பிரசுரிக்கப்பட்டது. சுடச்சுடப் பரப்பப்பெற்ற எண்ணங்களும் வேகமான நடையும் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தன. புத்தகத்தின் பெயரும்தான். நாங்களே எதிர்பார்க்கவில்லை- எட்டனா விலையில் வெளியிடப்பட்ட ஆயிரம் பிரதிகள் பதினைந்தே நாட்களில் விற்பனையாகிவிட்டன. மேலும் மேலும் பல ஊர்களிலுமிருந்து வந்த தேவைக்குரல் அச்சகத் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. அவர்கள் ஊக்கத்தோடு உழைத்து உடனடியாக இரண்டாம் பதிப்பாக ஆயிரம் பிரதிகள் தயாரித்துத் தந்தார்கள். அவையும் ஒருமாதத்தில் விற்பனையாகித் தீர்ந்தன.