பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

复忍念 வாழ்க்கைச் சுவடுகள் கைப்பிடி கொண்ட ஓர் அமைப்பை வெகுநேரம் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். மோட்டர் போதிய சூடு பெற்றதும் பஸ் புறப்படத் தயாராகும். பஸ்ஸில் எப்போதும் நெருக்கடிதான். பயணிகள் டிக்கட் வாங்கிக் கொண்டு ஏறுவது சிரமமாகவே இருந்தது. பொதுவாக, கிராம ஊழியன் அலுவலகத்துக்கு யாரும் வெளியூரிலிருந்து வருவதில்லை. நானும் அதிகமாக வெளியூர் போவதில்லை. திருச்சியில் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகங்கள் நடைபெற்றபோது அவ்வப்போது போய் வர நேரிட்டது. என் தம்பி முருகேசன் துறையூர் வந்து சில மாதங்கள் தங்கியிருந்தான். அவனுக்கு இருமல் கண்டது. அது காசநோய் என்று டாக்டர் தெரிவித்தார். அவன் ராஜவல்லிபுரம் போனான். அங்கு நோய் முற்றி விரைவிலேயே மரணம் அடைந்தான் 1946இல், அப்போது அவனுக்கு வயது 22. என் அண்ணா கோமதி நாயகம் துறையூர் வந்து சில மாதங்கள் தங்கியிருந்தார். தி.க, சிவசங்கரன் ஒருமுறை வந்தார். எஸ். சிதம்பரம் ஒரு தடவை வந்துபோனார். யாழ்ப்பாணம் எழுத்தாளர் சோ. தியாகராசன் துறையூருக்கு விசேஷமாக வந்தார். இவர் சோ. சிவபாதசுந்தரம் அவர்களின் தம்பியாவார். சோதி’யின் கவிதைகள் கிராம ஊழியனில் பிரசுரம் பெற்றிருந்தன. ந.பிச்சமூர்த்தி செட்டிகுளம் கோயிலில் இருந்து மாற்றப்பட்டு ரீரங்கம் கோயில் நிர்வாகியாகப் போய்விட்டார். அதனால் அவர் துறையூருக்கு வரவேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. திருச்சி வானொலி நிலையம் எப்பவாவது எனக்குப் பேசும், வாய்ப்பு அளித்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்ற ரீதியில் இருக்கும். அதற்காக நான் திருச்சி போய் வர நேரும். டி.கே.எஸ். சகோதரர்கள் தங்கள் நாடக முகாமைக் கோயம்புத்துருக்கு மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் அங்குச் சென்ற சில வாரங்களில், டி.கே. சண்முகம் எனக்குக் கடிதம் எழுதினார். கோவையில் 'பில்கணன் நாடகம் அரங்கேற இருக்கிறது. நீங்கள் இதை அவசியம் பார்க்க வேண்டும். நாடக ஆசிரியர் ஏ.எஸ்.ஏ. சாமி இங்குதான் இருக்கிறார். அவர் உங்களோடு ஒரு முக்கிய விஷயமாகப் பேச விரும்புகிறார். நீங்கள் உடனே புறப்பட்டு வந்தால் நல்லது என்ற எழுதியிருந்தார். கோவை போனேன். சினிமா உலகம் அப்போதும் கோவையில் தான் நடந்து வந்தது. என் அண்ணா கோமதி நாயகம் அதில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். நான் அண்ணாவுடன் தங்கினேன்.