பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ x- வாழ்க்கைச் சுவடுகள் வேண்டாம் எனக்கு இதில் விருப்பம் இல்லை. சினிமாத் துறையில் ஈடுபட எனக்கு மனமே இல்லை என்று கண்டிப்பாய்த் தெரிவித்துவிட்டேன். 'சாமி சொல்கிறபடி நீங்கள் செய்யலாம். பத்திரிகையையும் கவனித்துக் கொண்டு, சினிமாப் படங்களுக்கும் எழுதித் தரலாமே. உங்களுக்கு நல்லது தானே இந்த ஏற்பாடு என்று டி.கே. சண்முகமும் பரிந்துரைந்தார். ஆயினும் நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இலக்கிய எழுத்தாளனாக வளர வேண்டும் என்பதுதான் என் விருப்பம் சினிமா உலகம் எனக்கு அதற்குத் துணை புரியாது தடங்கலாகத்தான் இருக்கும். அதனால் அது வேண்டாம் என்று திடமாகக் கூறி மறுத்துவிட்டேன். நண்பர் சண்முகம் பிறகு தனியாகச் சொன்னார். இந்த ஏற்பாட்டுக்கு நீங்கள் சம்மதித்திருக்கலாம். பணம் தாராளமாகக் கிடைக்கும். பிறகு பெயர் தானாக வரும் என்றார். எனக்கு இந்த ஏற்பாடே பிடிக்கவில்லை என்று சொன்னேன். அவர் மவுனமாகச் சிரித்தார். இந்தக் காலத்தில் இப்படியும் இருக்கிறானே, பிழைக்கத் தெரியாதவன்' என்று அவர் எண்ணுவது போலிருந்தன அவர் பார்வையும் சிரிப்டம். நான் துறையூர் சேர்ந்து வழக்கமான என் பணிகளில் ஆழ்ந்தேன். துறையூரின் தனிமைச் சூழ்நிலையும் அமைதியான வாழ்க்கைமுறைகளும் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தன. அவை அ.வெ.ர.கி. ரெட்டியாருக்கு அலுப்புத்தந்தன என்றே தோன்றியது. அவர் திருச்சி நகருக்கே குடியேற வேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினார். திருச்சியில் திருலோக சீதாராம் அச்சகத் தொழிலிலும், சிவாஜி வாரப் பத்திரிகை வெளியீட்டிலும் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தது ரெட்டியாரின் ஆசைகளைத் தூண்டியிருக்க வேண்டும். கிராம ஊழியன் பத்திரிகை எழுத்தாளர்கள். பதிப்பகத்தார்கள். பத்திரிகைத் துறையினரிடையே கவனிப்புக்குரிய இதழாக இருந்தது. ஆனால் பொருளாதார ரீதியில் அது லாபகரமாக இயங்கவில்லை. ஆகவே ஏதாவது மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று ரெட்டியார் விரும்பினார். ஊழியன் அச்சகமும் நல்ல வருவாய் பெற்றுத் தரவில்லை. அதனால், அச்சு யந்திரங்களை விற்றுவிடலாம் என அவர் திட்டமிட்டார். பல மாதங்களாகத் திட்டமிட்டு, தேவையான நட்வடிக்கைகளை மேற்கொண்டு செயலாற்றி யந்திரங்களையும் அச்சகச் சாமான்களையும் நல்ல லாபத்துக்கு விற்றுவிட்டார் ரெட்டியார். அப்படி விற்பதற்கு முன்னதாக, வெளிவந்த கிராம ஊழியன் இதழில் அறிவிப்பு செய்யப்பட்டது. வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கருதி, கிராம ஊழியன் பத்திரிகையைத் திருச்சிக்கு இடமாற்றம் செய்வதற்கான