பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 வாழ்க்கைச் சுவடுகள் 29 நான் சென்னை சேர்ந்து என் அண்ணாவுடன் சினிமா உலகம் அலுவலகத்தில் தங்கினேன். அந்த அலுவலகம், மவுண்ட் ரோடை தற்போதைய அண்ணா சாலை) அடுத்த ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில் உள்ள சுபத்ராபாய் மேன்ஷன் என்ற விஸ்தாரமான இடத்தில் ஒரு பகுதியில் இருந்தது. இந்த வளாகமே ஒரு தனி உலகம் போல் இருந்தது. அநேக மோட்டார்கள் பழுது பார்க்கும் பட்டறைகள், பலவிதமான அலுவலகங்கள், சில சினிமா கம்பெனிகள், ஃப்ரீ இண்டியா என்கிற ஆங்கில வாரப் பத்திரிகை அலுவலகம் - அச்சகம் - இப்படிப் பல்வேறு நிறுவனங்கள் அங்கு இயங்கிக் கொண்டிருந்தன. நீண்ட வரிசையான கட்டிடத்தில், ஒரு மூலையில் இருந்த விசாலமான தனிப் பகுதியில் சினிமா உலகம் ஆபீஸ், அதன் முன்பக்கம் ஆர்ட்டிஸ்ட் வேந்தன் தொழில் புரிந்துகொண்டிருந்தார். சினிமா சம்பந்தமான போஸ்டர்கள், விளம்பரங்களுக்கான படங்கள் தயாரித்துக் கொடுப்பது வேந்தன் வேலை போட்டோக்களை வெட்டி ஒட்டி, கலர்கள் தீட்டி வசீகரமாக அவற்றை அவர் தயாரிப்பார். அதில் அவருக்கு நல்ல வருமானம். நாலைந்து உதவியாளர்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்குக் கணிசமான சம்பளம் கொடுக்கவும், இட வாடகை முதலியன தரவும், அவர் தாராளமாகச் செலவு செய்யவும் அவருக்குப் பணம் கிடைத்துக்கொண்டிருந்தது. அவரும் அவருடைய ஆட்களும் இரவில் வெகுநேரம் வரை வேலை செய்துகொண்டிருப்பார்கள். இதர சில அலுவலகங்களிலும் இரவு வேலை நடைபெறும். அதனால் அந்த வளாகம் இரவிலும் பரபரப்பாகவும் பலவித ஒசைகளோடும் விளங்கும். வேறொரு மூலைப்பகுதியில் 'கண்ணா பிலிம்ஸ்' என்ற படக்கம்பெனி செயலாற்றியது. அதில் கவிஞர் சதுசு யோகி தங்கியிருந்தார். சினிமா உலகம் இருந்த கட்டிட வரிசையில், வேறொரு பகுதியில் 'எபிஷியன்ட் பப்ளிஸிட்டீஸ்' எனும் விளம்பர ஆலோசகர்கள் நிறுவனம் தொழில்புரிந்து வந்தது. அதை நான்கு சகோதரர்கள் கவனித்துவந்தார்கள். தொழில்துறையினர், வணிகர்கள், சினிமா கம்பெனிக்காரர்கள் முதலியவர்கள் தங்களுடைய விளம்பரங்களை இவர்கள் மூலம் பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். பத்திரிகைத்துறை வளர்ச்சியோடு புதிதாகத் தோன்றி லாபகரமாக வளர்ந்து வந்த தொழில்முறைகளில் இந்த 'அட்வர்டைசிங் கன்சல்டன்ட்ஸ்' எனும் தொழிலும் ஒன்று ஆகும். இப்படிப்பட்ட நிறுவனங்கள் நாகரிகப் பெருநகரங்களில் வளத்தோடு தொழில் புரிந்து பிரகாசிக்கின்றன. சில மிகப்பெரிய அமைப்புகளாக வளர்ந்துள்ளன.