பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33 வாழ்க்கைச் சுவடுகள் அவர் எனது எழுத்துக்களையும் சிறுசிறு வெளியீடுகளாக வெளியிட விரும்பினார். அவருக்காக அவள் ஒரு எக்ஸ்ட்ரா சினிமா துணை நடிகை பற்றியது, ராதை சிரித்தாள் போன்ற கதைகள் எழுதிக்கொடுத்தேன். அவை இருபத்து நான்கு பக்கங்கள், முப்பது பக்கங்கள் என்ற அளவில் புத்தகங்களாக வெளிவந்தன. சென்னைக்கு வந்த பிறகும் நான் புத்தக வெளியீட்டு முயற்சியில் ஓரளவு ஈடுபட்டேன். துறையூரில் சில வசதிகள் இருந்தன. ஊழியன் பிரஸ் அச்சுக் கூலியில் சலுகை காட்டியது. அச்சகத் தோழர்களும் பலவகைகளில் ஒத்துழைப்புத் தந்து உதவினார்கள். சென்னையில் அவ்வசதிகள் இல்லை. ஆயினும் நண்பர் சூரி அவரால் இயன்ற அளவு உதவிகள் புரிந்தார். 'ஒய்யாரி சிறுகதை, நாசகாரக்கும்பல் நையாண்டி பாரதி நாடகம், அறிவின் கேள்வி (கோரநாதன்)-இப்படிச் சில சிறுபிரசுரங்கள் வெளியிட்டேன். 'சாந்தி நிலைய வெளியீடுகள் முன்பு போல் வேக விற்பனை பெறவில்லை. இருப்பினும் பணம் கிடைத்துக் கொண்டுதானிருந்தது. தாராளமாகப் புத்தகங்கள் வாங்க முடிந்தது. அண்ணாவும் நானும் ஆங்கிலப் புத்தகங்கள். அதிகம் வாங்கினோம். ராண்டம் ஹவுஸ் புக்ஸ் என்றும், மாடர்ன் லைபிரரி எடிஷன்ஸ் என்றும் அமெரிக்க வெளியீடுகள் வந்து கொண்டிருந்தன. ஐந்து ரூபாய் விலையில், அழகான கட்டமைப்பில், உலக இலக்கியங்கள் பலவும் கிடைத்தன. பெரிய புத்தகமாக இருந்தால், ஜெயன்ட் எடிஷன் என்று பத்து ரூபாய் விலையில் விற்கப்பட்டன. உயர்ந்த இலக்கிய நூல்களை அப்படி வாங்க முடிந்தது. ரஷ்ய இலக்கியங்கள் சோவியத் வெளியீடுகளாகக் குறைவான விலைக்குக் கிடைத்தன. பெங்குவின் புத்தகங்கள், பெயர்பெற்ற ஆசிரியர்களின் நூல்களை, செட் செட்டாகப் பத்துப் புத்தகங்கள், எட்டு நூல்கள் என்ற தன்மையில்) பிரசுரம் செய்தன. அவ்வகையில் பெர்னாட் ஷா, டி.எச். லாரன்ஸ், எச்.ஜி. வெல்ஸ் போன்ற படைப்பாளிகளின் நூல்களை மலிவான விலைக்கு வாங்க முடிந்தது. கிடைக்கிற போது புத்தகங்களை வாங்கி வைத்துவிட்டால், படிக்க முடிகிறபோது படித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு நாங்கள் புத்தகங்களைத் தொடர்ந்து வாங்கிக்கொண்டிருந்தோம். படிக்கவும் செய்தோம். ஒவியர் வேந்தன் இரவில் வெகு நேரம் வரை விழித்திருந்து உழைத்தது எங்களுக்கும் ஒரு உந்துதலாக இருந்தது. பத்தரைபதினோரு மணி ஆகும் போது, 'என்ன, டீ சாப்பிடப் போகலாமே?' என்பார் வேந்தன். மவுண்ட் ரோடு ஈரானி ஓட்டலுக்குப் போய் தேநீர் அருந்திவிட்டு மெதுவாகப்பேசிக்கொண்டே நடந்து வருவது மனோகரமான அனுபவமாக இருந்தது. பின்னர் பன்னிரண்டு மணி வரை படிப்போம். அலுப்புத் தட்டுவது போலிருந்தால், 'என்ன, பிக்சருக்குப் போகலாமே? என்று வேந்தன் அழைப்பார். தியேட்டர்கள் அருகிலேயே இருந்தன, ஒடியன்,