பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வாழ்க்கைச் சுவடுகள் சடகோபன் தூய காந்தியவாதி. காந்தீயக் கொள்கைகளை நடைமுறையில் கையாண்டவர். சிறிய அச்சகம் வைத்து, தமது பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். அதில் அவருக்கு ஒரு மன நிறைவு - ஆத்ம திருப்தி இருந்தது. இராமாயண திரிவேணி என்று - வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசி ராமாயணம் மூன்றையும் ஒப்பிட்டு - அவர் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாக விளங்கின. ஓர் இலட்சியப் பிடிப்போடு அவர் தியாகியை நடத்திக் கொண்டிருந்தார். அதே ரீதியில் நடத்தி வந்தால் அவர் தம் ஆயுள் காலம் பூராவும் 'தியாகி இதழை வெளியிட்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அரசியல்வாதி எஸ்.ஏ.ரகீம் சடகோபனின் நண்பரானார். இந்தக் காலத்தில் இப்படிப் பத்திரிகை நடத்திக்கொண்டிருப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை; காலம் ரொம்பவும் மாறிவிட்டது. காலத்துக்குத் தக்கபடி நாமும் பத்திரிகையை மாற்றியாக வேண்டும் என்று யோசனைகள் கூறினார். நீங்கள் சென்னைக்கு வாங்க தியாகியைச் சென்னையிலிருந்து பிரமாதமாகக் கொண்டு வரலாம். தியாகி'யை வெற்றிகரமான பத்திரிகையாக நடத்திக்காட்டுவோம் என்று உறுதி அளித்தார். இராம. சடகோபன் நண்பரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டார். தியாகி அச்சகம், பத்திரிகை, அவரது குடும்பம் எல்லாம் சென்னைக்கு மாற்றப்பட்டன. எஸ்.ஏ.ரகீம் இணை ஆசிரியராகி, தியாகி'யைத் தடபுடலான இதழாகத் தயாரித்து வெளியிட்டார். ஆர்ப்பாட்டமான அட்டை நல்ல வழுவழுத் தாளில், வர்ணங்களில் தலைவர்கள் படங்கள். இதில் அவர் ஒரு புதுமை பண்ணினார். ஒவ்வொர் இதழ் அட்டையிலும் வடஇந்தியத் தலைவர் ஒருவரையும் தமிழ்நாட்டுத் தலைவர் ஒருவரையும் இணைத்துப் படம் வெளியிட்டார். அவர்களைப் பற்றி உள்ளே கட்டுரை எழுதினார். விறுவிறுப்பான அரசியல் சமாச்சாரங்களையும் அளித்தார். மற்றும் கதை, கவிதை, இலக்கியக் கட்டுரைகளும் இடம் பெற்றன. - பத்திரிகை அமர்க்களமாகத்தான் இருந்தது. ஆனாலும் விற்பனையில் சூடு பிடிக்கவில்லை. பிரமாதமாகத் தயாரித்ததால் செலவுகள் அதிகமாயின. ஆறு மாதங்களுக்குள் எஸ்.ஏ. ரகீம் விலகிக்கொண்டார். முழுப் பொறுப்பும் இராம. சடகோபன் மீது படிந்தது. மிகவும் சிரமப்பட்டார். விழுப்புரத்தில் வாழ்க்கை நடத்தியது போலவேதான் அவர் சென்னையிலும் வாழ்ந்தார். தோய்த்துத் தோய்த்துப் பழுப்பேறிய கதர் வேட்டி கதர்ச் சட்டை, காந்திக் குல்லாய் இவற்றோடு சைக்கிளில்தான் அவர் எங்கும் போய் வந்தார். அட்டைப் படம் தயாரிக்க என்று வேந்தனைப் பார்க்கவும் விளம்பரங்கள் கேட்டு எபிஷியண்ட் பப்ளிசிட்டீஸ் சகோதரர்களைச் சந்திக்கவும் சடகோபன் சுபத்ராபாய் மேன்ஷனுக்கு அடிக்கடி வந்தார். எனது