பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 133 அறிமுகம் கிட்டவும் தியாகிக்குக் கதை கட்டுரை எழுதி உதவும்படி கேட்டுக்கொண்டார். எழுதினேன். அவரால் வெகுகாலம் தாக்குப்பிடிக்க இயலவில்லை. பத்திரிகையை நிறுத்திவிட்டு, அச்சகத்தை மட்டும் நடத்த முயன்றார். அதுவும் வெகு நாட்கள் ஓடவில்லை. விழுப்புரத்தில் இருந்தபோது அவருக்குக் கிட்டியிருந்த மனநிறைவும் ஆத்மதிருப்தியும் சென்னைக்கு வந்தபிறகு அவருக்கு இல்லாது போயின. தியாகி இராம. சடகோபனைப் பற்றி நினைக்கும்போது மனித வாழ்க்கையின் வியர்த்தம் நமக்குப் புரிகிறது. நேர்மையாய், நியாயமாய்ப் பாடுபட்டு, இலட்சியப் பணிபுரிந்து ஏதோ சாதிக்க வேண்டும் - சாதிக்க முடியும்- என்ற நம்பிக்கையோடுதான் அவர் இதில் ஈடுபட்டார். அதற்காகவே வாழ்ந்தார். ஆயினும் அவர் வாழ்வில் சாதித்தது எதுவும் இல்லை. தம்மையும் தம்மைச் சேர்ந்தவர்களையும்கூட திருப்திகரமாக வாழவைக்கவும் அவரால் இயலாது போயிற்று. இப்படி திருலோக சீதாராம் ஒருமுறை என்னிடம் சொன்னார். அவர் பேச்சு பொருள் பொதிந்ததாகத்தான் இருந்தது. இதே தொனியில், ஆனால் வேறு கோணங்களில் பேச்சு உதிர்த்தார் கவிஞர் சது.க. யோகியார். பாரதிக்கு அடுத்த தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவர்களில் யோகியாரும் ஒருவர். கம்பனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். விருத்தப் பாக்களில் அருமையான கவிதைகள் இயற்றியவர். தமிழ்க்குமரி, கண்ணகி, அகல்யா போன்ற அவரது கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. மரியா மகதலேனா கதையைச் சிறுகாவியமாக இயற்றியுள்ளார். பாரசீகக் கவியமுதம் ருடையத்தைத் தமிழாக்கியிருந்தார். அதே தன்மையில் அவரே ஆங்கிலத்தில் 'ருபையம் என்றொரு காவியம் படைத்திருந்தார். அது அச்சில் வரவில்லை. அவர் சினிமாத் துறையில் ஈடுபட்டு அதிர்ஷ்டம் சுந்தரமூர்த்தி நாயனார் போன்ற படங்களுக்குக் கதைவசனம் எழுதியுள்ளார். தாமே 'ஆனந்தன் அல்லது அக்கினிபுராண மகிமை' என்றொரு படம் தயாரிப்பதாக விளம்பரங்கள் செய்தார். ஆனால் அம் முயற்சி வெற்றிபெறவில்லை. அவருடைய கவிதையாற்றலும் மற்றுமுள்ள திறமைகளும் உரியவரவேற்பையும் கவனிப்பையும் பெறவில்லை என்ற மனக்குறை அவருக்கு இருந்தது. பொருளாதார நிலையிலும் அவர் சிரமங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் சுபத்ராபாய் மேன்ஷனிலிருந்த கண்ணா பிலிம்சில் தங்கியிருந்தார். யோகியார் அடிக்கடி சினிமா உலகம் ஆபீசுக்கு வந்து சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருப்பார். முன்னிரவுகளில் வெகுநேரம் பேசிப் பொழுது போக்குவார். ஆபீசுக்குப் பின்பக்கம் திறந்த வெளி விரிந்து கிடந்தது. அங்கு நாற்காலிகளைப் போட்டு, பரந்த வானத்தின் கீழே, நட்சத்திரங்களின் மோகன