பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f:3.5 வாழ்க்கைச் சுவடுகள் விளம்பரங்கள் கொடுக்கிற விஷயமாகப் பேசிமுடிவு பண்ண, திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலர் எபிஷியன்ட் பப்ளிசிட்டீஸ் சகோதரர்களை நாடி வருவர்கள். அப்படி வந்தவர்களில் டைரக்டர் நாகூர் என்பவரும் ஒருவர். நாகூரும் சில கூட்டாளிகளும் சேர்ந்து பாலாஜி பிக்சர்ஸ் என்ற பெயருடன் படம் தயாரித்து வந்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் லைலா மஜ்னு என்ற படம் தயாரித்தார்கள். டி.ஆர். மகாலிங்கமும் எம்.வி.ராஜம்மாவும் நடித்த படம் என்.எஸ். கிருஷ்ணன் டி.ஏ. மதுரம் ஜோடியின் நகைச்சுவைப் பகுதியும் அதில் உண்டு. இதே காலகட்டத்தில் இன்னொரு லைலா மஜ்னு படமும் தயாராகிக் கொண்டிருந்தது. ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பு அது நாகேஸ்வரராவ், சுசீலா நடித்தது. ஜெமினி ஸ்டுடியோவின் படங்களுக்குத் தனிஒருவர் வசனம் எழுதுவதில்லை. ஜெமினி கதை இலாகா' என்று பல எழுத்தாளர்கள் படக்கதை வசனம் தயாரிக்கும் முறையைப் படாதிபதி எஸ்.எஸ். வாசன் நடைமுறைப்படுத்தியிருந்தார். அதைப்பின்பற்றி இதர படத்தயாரிப்பாளர்கள் சிலரும் அவ்விதமே ஒரு படத்துக்குப் பலபேரிடம் வசனம் எழுதி வாங்கும் முறையைக் கையாள்வது வழக்கமாயிருந்தது. சிறிது காலம் இப்படி நடந்தது. திரைக்கதை, டைரக்ஷன் என்று ஒருவர் பெயரைப் போட்டுக் கொள்வார்கள். பாலாஜி பிக்சர்சாரும் அவ்விதமே செய்தார்கள். லைலா மஜ்னு என்றொரு படம் இந்தி மொழியில் வந்து வெற்றிகரமாக ஓடியது. அந்தப் படத்தைப் பார்த்து தமிழ்ப்படத்துக்கும் திரைக்கதை அமைத்துக் கொண்டார்கள். அந்தப் படத்தின் வசனத்தை உரையாடல்களையே பெரும்பாலும் தமிழாக்கி எழுதி வைத்திருந்தார் ஒருவர். அதை ஒட்டியும், சில காட்சிகளுக்குச் சொந்தமாகவும் வசனம் எழுதுவதற்கு எழுத்தாளர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள் படத்தயாரிப்பாளர்கள். கவிஞர் சதுசு யோகியார் சிலகாட்சி எழுதிக் கொடுத்திருந்தார். என்னிடமும் சிலகாட்சிகளுக்கு உரையாடல்களை எழுதிவாங்கலாம் என்று எபிவியன்ட் பப்ளிசிட்டிஸ் சகோதரர்கள் நாகூரிடம் சொன்னார்கள். நாகூர், கணபதி ஐயருடன், என்னை அணுகினார். தம் எண்ணத்தைச் சொன்னார். எனக்குச் சம்மதமில்லை என்று நான் தெரிவித்தேன். இரண்டு பேரும் வலியுறுத்தி, சிலகாட்சிகளுக்குத் தான் எழுதவேண்டும் படப்பிடிப்புக்கு ஸ்டுடியோவுக்கு வரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. நீங்கள் இங்கிருந்து எழுதிக்கொடுத்தாலே போதும் என்று நாகூர் சொன்னார். 'உங்களுக்கு இதில் சிரமமே கிடையாது. ஒரு சில காட்சிகள் தானே நீங்கள் எளிதில் எழுதிவிட முடியும் என்று நண்பர் கணபதியும் கூறினார்.