பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 139 நான் இசைவு தெரிவிக்க வேண்டியாதாயிற்று நாகூரின் உதவியாளர் டி.ஏ. மூர்த்தி என்பவர் கதைச் சுருக்கம், காட்சி அமைப்புகள் முதலியன அடங்கிய ஒரு குறிப்புப் புத்தகத்தைத் தந்தார். படித்துப் பார்க்கும்படி சொன்னார். எந்த எந்தக் காட்சிகளுக்கு நான் வசனம் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொன்னார். முதலில் இரண்டு மூன்று கட்டங்களுக்கு எழுதித் தந்தால் போதும் என்றார். கயசும் லைலாவும் சிறுபருவ விளையாட்டுகள் சேர்ந்து விளையாடி ஆடிப் பாடி மகிழ்வது போன்ற காட்சிகள் எழுதி வைத்தேன். குறித்த நாளில் மூர்த்தி வந்து வாங்கிப் போனார். பிறகு கயசும் லைலாவும் வளர்ந்து பெரியவர்களாகி, பேசிப் பழகி, காதலர்களாக விளங்கும் காட்சிகள். மேலும் ஒன்றிரண்டு. மொத்தத்தில் பத்து இடங்கள் காட்சி அமைப்புகள்)கூட இல்லை. சில வாரங்களுக்குப் பிறகு மூர்த்தி வந்தார். அன்று படப்பிடிப்பு நடைபெறப் போவதாகவும், விரும்பினால் நான் அதைப் பார்க்க வரலாம் என்றும், அவர் வந்து அழைத்துப் போவதாகவும் கூறினார். நான் வரவில்லை என்று சொல்லி விட்டேன். - மேலும் சில வாரங்களுக்குப் பிறகு நாகூர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்தார். கீழ்ப்பாக்கத்தில் இருந்த அவருடைய வீட்டுக்குப் போனேன். படம் முடியும் நிலையில் இருக்கிறது. நன்றாக அமைந்திருக்கிறது என்று மகிழ்ச்சியோடு சொன்னார். அன்று அவர் வீட்டில் சாப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீண்ட மேஜையில் சாப்பாடு விருந்து தான். நாகூர், அவர் குடும்பத்தார். மூர்த்தி, நான்- மொத்தம் ஏழு பேர். நாகூரின் மனைவி தாம் பரிமாறி உபசரித்தார். உணவுத் தயாரிப்புகள் ருசிகரமாக இருந்தன. சாப்பிடும் போதே நாகூர் பேசினார்: "படம் முடியப் போகுது. எல்லாம் நல்லா வந்திருக்கு நீங்க எழுதிக் கொடுத்ததற்காக உங்களுக்கு ஆயிரம் ரூபாய் தரலாம்னு முடிவு பண்ணியிருக்கோம் உங்களுக்கு இன்னும் அதிகமாகவே தரணும். ஆனால் புதுக்கம்பெனி. தாராளமாச் செலவு பண்ணுவதற்குப் பொருளாதார வசதியில்லே. ஆயிரம் ரூபாய் குறைச்சல் என்று நீங்க எண்ணினால் சொல்லுங்க என்ன? என்றார். நான், சரிதான். இதுவே போதும் என்று சொல்லிவிட்டேன். சாப்பிடச்செய்து, சாப்பிடுகிற போதே இப்படிப் பேசி முடிப்பது இவர்களுக்கு வசதியான செயல்முறை போலும் என்று எண்ணிக் கொண்டேன். அப்புறம் நண்பர் கணபதி, நாகூர் எவ்வளவு பணம் தந்தார் என்று கேட்டார். ஆயிரம் ரூபாய்க்குச் செக் தந்தார் என்றேன்.