பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R42 வாழ்க்கைச் சுவடுகள் 'எனக்கு அது சம்மதமில்லை. எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், நான் தேர்ந்துகொண்ட பாதையிலேயேதான் நான் முன்னேற விரும்புகிறேன்' என்று கூறினேன். 22 தாங்கள் கோடம்பாக்கத்தில் பெரியவிட்டில் மூன்று மாதங்கள்தான் வசித்தோம் திகதி அவர் வேலை பாத்த வங்கி அருகிலேயே தங்கசாலைத் தெருவில் இருந்த ஒரு லாட்ஜின் அறையின் தங்கப் போவதாகக் கூறிப் பிரிந்து சென்றார் எங்கள் இரண்டு பேருக்கும் அவ்ளவு பெரிய இடம் தேவையில்லை என்பதால் என் அண்ணாவும் நானும் அதைக் காலிசெய்தோம். திருவன் விக்கேணி கிருஷ்ணம்பேட்டைப் பகுதியில் முருகப்ப முதவி தெருவில் இருந்த ஒரு விட்டின் ஓர் அறையில் குடிபுகுத்தோம் அது மிகச் சின்ன அறை, போதுமான வசதிகள் இல்லாத இடம் அதில் இருந்தபடியே வேற நல்ல இடம் தேடிக் கொண்டிருந்தோம். அச்சுத் தொழிலாளித் தோழர் ஒருவர் உதவிபுரிந்தார். மிகச் சிறப்பான இடம் கிடைத்தது கிருஷ்ணாம்பேட்டை வட்டாரத்திலேயே, டாக்டர் நடேசன் சாலையை ஒட்டிய கிளை E டிப்போத் தெரு, அதன் வழி நடந்து சிறு சந்து ஒன்றைக் கடந்தால் விசாலமான ஒரு தோட்டம். மிகப் பசுமையான இடம். வாழை மரங்கள் செறிந்து நிற்கும். பெரும் பரப்பில் கத்திரி, கீரை வகையறா பயிரிட்டிருக்கும் உரிய காலத்தில் தவனம் பயிரிடப்படும் மல்லிகைச் செடிகள், செம்பருத்திச் செடிகளும் ஒருபுறம் ஓங்கி வளர்ந்து நின்றன. அத் தோட்டத்தின் ஒரத்தில் இரண்டு குடிசைகள். செங்கல் சுவர்கள். சுண்ணாம்பு பூசி வெள்ளையடிக்கப்பட்டவை. ஒலைக் கூரை கொண்டவை. அவற்றில் ஒன்று எங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது. தோட்டம் தனியாக எந்தத் தெருவையும் சேர்ந்திருக்கவில்லை. நேரே வெங்கடசாமி இரண்டாவது தெரு என ஒன்று இருந்தது. மற்றது. சந்து கொண்டு சேர்ந்த E டிப்போத் தெரு', நாங்கள் தபாலுக்குக் கார்டன் எண்.10, E டிப்போத் தெரு, கிருஷ்ணாம் பேட்டை, சென்னை-5 என்று முகவரி கொடுத்தோம். இந்தப் பத்தாம் நம்பர் தோட்ட வீடு ஒரு பதினைந்து வருட காலம் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்தது. பெயர் பெற்ற எழுத்தாளர்கள், பத்திரிகைக்காரர்கள், நடிகர்கள், அரசியல் வாதிகள் சிலர் வந்து போனார்கள். இளைய எழுத்தாளர்கள் அநேகர் தேடிவரும் இடமாகவும் இருந்தது அது. அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் எல்லம்மாள் என்ற அம்மையார் அவ் வட்டாரத்தில் செல்வாக்குப் பெற்றவராக விளங்கினார். அவருடன்