பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் #45 பத்திரிகை தொடங்குவதற்காக அநேக வருடங்களுக்கு முன்பே விலகியிருந்தார். கேள்வி பதில் பகுதியைக் கவனித்து வந்த 'மைனா என்ற புனைபெயர் கொண்ட சந்தானம் வெளியிலிருந்து அந்தப் பகுதியை எழுதிக் கொண்டிருந்தார். பதிப்பாசிரியர், ஆசிரியர் என்று ஹனுமான் இதழை வாங்கியிருந்த வக்கீல்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருக்கும். மருமகனான எஸ். ராஜகோபாலன் என்பவர் எழுத்தார்வம் கொண்டவர். அவர் ஆசிரியர். மாமனாரான வக்கீல் பதிப்பாசிரியர். ஆபீசில் இருந்து கவனித்துக் கொள்ள ஓர் எழுத்தாளர் இருந்தார். அவர் வேறொரு பத்திரிகையில் சேர்வதற்காக 'ஹனுமான் பொறுப்பை விட்டுவிடுவதில் முனைப்பாக இருந்தார். அவர் விலகியதும் பத்திரிகையைக் கவனித்துக் கொள்வதற்காக அவர்கள் என்னை அழைத்தார்கள். எஸ். ராஜகோபாலன் பத்திரிகைத் துறையில் தாங்கள் ஏமாற்றப்பட்ட கதையைச் சொன்னார். பத்திரிகை நஷ்டத்தில்தான் நடக்கிறது. இன்னும் சிறிது காலம் நடத்திப் பார்க்கலாமே என்ற ஆசையிருக்கிறது. துணை ஆசிரியருக்கு அதிகமான சம்பளம் கொடுப்பதற்கில்லை. நீங்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார். நான் நூறு ரூபாய் போதும் என்று சொன்னேன். 1950 பிப்ரவரியில் நான் ஹனுமான் வார இதழில் சேர்ந்தேன். கதைகள், கட்டுரைகள், சுவையான விஷயங்கள் என்று நிறையவே எழுதினேன். எஸ். ராஜகோபாலனும் அதிகம் எழுதினார். வெளியிலிருந்து வருகிற கதைகளைப் படித்து பிரசுரிக்கத் தகுதியானவற்றைத் தாராளமாகவே வெளியிட்டோம். பேசிய தொகை கிடைக்க வழி இல்லை என்பதால் சினிமாச் செய்திகள், கேள்வி பதில்கள் எழுதிக் கொண்டிருந்த மைனா சந்தானம் நின்று விட்டார். ஆகவே, அவற்றையும் நானே எழுதினேன். மைனா பதில்கள் குயிலோசை என்று பெயர் மாற்றம் பெற்றது. செவ்வானம் என்ற தொடர்கதை எழுதினேன். பின்னர் அடுத்த வீட்டுக்காரி என்ற தொடர்கதை வளர்ந்தது. அவ்வப்போது சில புதிய பகுதிகள் சேர்த்தேன். - இருப்பினும், சோகை பிடித்த பத்திரிகை புதுபலம் பெற்று எழுந்துவிடவில்லை. என் எழுத்துகளுக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது. சிங்கப்பூர் தமிழ்முரசு ஆசிரியர் 'தமிழவேள் கோ. சாரங்கபாணி தனது நாளிதழுக்குக் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதித் தரும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து எழுதினேன். ஒரு தொடர்கதையும் எழுதினேன். போதிய அளவு பணம் கிடைத்துவந்தது. சிங்கப்பூர் தமிழ்முரசுக்குச் சென்னை திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் ஒரு மாடியில் கிளை அலுவலகம் இருந்தது. அதன் ஆசிரியரின் தம்பி இராதாகிருஷ்ணன் அலுவலக நிர்வாகியாக இருந்தார். அவரே