பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் I金ア தலைமை வகிக்கும்படி செய்வது. அவர் திரைப்பட இயக்குநராகவோ, நடிகராகவோ இருப்பார். அவர் நாடகத்தைப் பார்த்துப் பாராட்டுவார். இளைஞர்களின் நடிப்புத்திறமை அவரை வசீகரிக்கும். அவர் மூலம் ஒன்றிரண்டு பேராவது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுவிடமுடியும் என இளைஞர்கள் கனவு காண்பது இயல்பாக இருந்தது. அப்படிப்பட்ட கனவுகளோடு எங்கெங்கிருந்தோ சென்னைக்கு வந்த இளைஞர்களில் அநேகர் சாப்பாட்டுக்காகவும் தங்குமிடத்துக்காகவும் ஒட்டலில் பணியாளர்களாகச் சேர்ந்து உழைத்தார்கள். அவர்களது சினிமா மோகமும் நடிப்புத் தாகமும் அவர்களை ஆட்டிப்படைத்தன. அவர்கள் சிறு குழுக்களாகச் சேர்ந்து, யாராவது ஒரு வாத்தியாரைப் பயிற்சியாளராகக் கொண்டு, நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இவர்களில் படித்துப் பட்டம் பெற்றவர்களும் இருந்தார்கள். இத்தகைய ஒரு குழுவினருக்குத்தான் வாத்தியார் வரதராஜன் பயிற்சி அளித்தார். அவர் பள்ளிக்கூட ஆசிரியராகவும் பணிபுரிந்துவந்தார். நாடகத்தில் நடிக்கப் பெண்கள் வேண்டுமல்லவா? அதற்கும் இளம் பெண்கள் மிகுதியாகவே இருந்தார்கள். சினிமாவில் நடிக்கும் ஆசையால் வீட்டை விட்டு, ஊரைவிட்டு, பட்டணம் வந்தவர்கள், சென்னையிலேயே எப்படிஎப்படியோ வாழ்கிறவர்கள் என்றைக்காவது ஒருநாள் நாமும் சினிமா நடிகை ஆகிவிடமுடியும் என்ற ஆசையோடு முயல்வார்கள். அவர்கள் பயிற்சிபெறும் குழுக்களில் சேர்ந்து நடிக்கத் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு நாடகத்துக்கு பயிற்சி நாட்களையும் சேர்த்தே தான் இவ்வளவு ரூபாய் என்று மொத்தமாய்ப் பேசிக்கொள்வார்கள். அது குறைவான தொகையாகத் தான் இருக்கும். பயிற்சி நாட்களில் டிபன், காப்பி, சாப்பாடு எல்லாம் கிடைக்கும். வறுமை நிலையில் உள்ள பெண்கள் இதற்காகவே நாடகத்தில் நடிக்க வருவது உண்டு. அவர்களில் சாமர்த்தியசாலிகள் வேறு வழிகளில் பணம் சம்பாதித்துவிடுவார்கள். இந்த ரகப் பெண்களில் அநேகளிடம் நல்ல் நடிப்புத் திறமை இருந்தது. வாத்தியார் வரதராஜன் 'விடியுமா? நாடகத்துக்கு இரண்டு பெண்களை ஏற்பாடு செய்திருந்தார். அவர்களில் ஒருத்தி அழகான தோற்றம் பெற்றிருந்தாள். இன்னொருத்தி நல்ல நடிப்புத் திறமையும் வசனங்களை நன்கு உச்சரிக்கும் ஆற்றலும் பெற்றிருந்தாள். நாடகத்துக்குக் கவிஞர் தமிழ்ஒளி அருமையான பாடல்கள் எழுதி உதவினார். நாடக அரங்கேற்றத்துக்கு அந்நாளையப் பிரபல திரைப்பட இயக்குநர் கே. சுப்பிரமணியத்தை அழைத்திருந்தார்கள். பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் க. அன்பழகனைத் தலைமை வகித்துப் பாராட்டிப் பேசுவதற்காகக் கூப்பிட்டிருந்தார்கள்.