பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்லிக்கண்ணன் #49 'சம்பளத்தைப் பற்றி ஒன்றுமில்லை. நான் எந்தப் பத்திரிகைக்கும் வேலைக்குப் போக விரும்பவில்லை. புதுசோ. பழசோ எந்தப் பத்திரிகைக்குமே தான்' 'என்ன காரணம்? 'என் மனசுக்குப் பிடிக்கவில்லை. என் மனசுக்கு ஒத்துவராத காரியங்களை நான் செய்வதில்லை. நான் படித்தாக வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. நான் எழுதியாக வேண்டியவையும் அதிகம் உள்ளன. பிற இடங்களுக்கு வேலைக்குப் போவதனால் எனக்கு நஷ்டமே ஏற்படுகிறது என்று உறுதியாகக் கூறினேன். 'அப்ப சரி வெளியிலேயிருந்து கதை கட்டுரைகள் எழுதிக்கொடுங்கள் என்று சொல்லிவிட்டு, இரண்டு பேரும் விடை பெற்றுச் சென்றார்கள். அவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் அளிக்க நேர்ந்ததற்காக நான் வருத்தம் எதுவும் கொள்ளவில்லை. சிறிது காலத்துக்குப் பின்னர் வேறொரு அழைப்பு வந்தது. எபிஷியன்ட் பப்ளிசிட்டீஸ் சகோதரர்களின் நண்பர் ஒருவர் மதுரையில் நடந்து வந்த நாளிதழ் தமிழ்நாடு அலுவலகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். விளம்பரப்பிரிவை அவர் கவனித்து வந்தார். மதுரையிலிருந்து சென்னை வந்த அவர் கணபதி ஐயரிடம், மதுரைப் பத்திரிகைக்கு ஒர் உதவி ஆசிரியர் தேவை என்றும், வல்லிக்கண்ணன் வருவதாக இருந்தால் கூடவே அழைத்துப் போகலாம் என்றும் தெரிவித்தார். கணபதி என் அண்ணா மூலம் என் கருத்தை அறிய முயன்றார். 'நான் எந்தப் பத்திரிகையிலும் சேர விரும்பவில்லை. அதிலும் தினசரிப் பத்திரிகை வேலை எனக்கு ஒத்துவரவே வராது. ஒரு வாரம் பகல் வேலை, ஒரு வாரம் இரவு வேலை என்று மாற்றி மாற்றி உழைக்க வேண்டியிருக்கும். அது எனக்குச் சரிப்படாது' என்று கூறிவிட்டேன். வேறொரு முக்கிய அழைப்பு சிங்கப்பூரில் இருந்து வந்தது. தமிழ்முரசு’ என் எழுத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. நான் சிங்கப்பூர் சேர்ந்து தமிழ்முரசு ஆசிரியர் குழுவிலேயே இடம் பெற்றால் பத்திரிகைக்கும் நல்லது எனக்கும் நல்லது என்று அதன் ஆசிரியர் சாரங்கபாணி எண்ணினார். அப்படி நான் அங்கு வரச் சம்மதிப்பேனா என்று கேட்டு எழுதும்படி அவர் சென்னை அலுவலகத்தைக் கவனித்து வந்த அவருடைய சகோதரர் இராதாகிருஷ்ணனுக்கு எழுதினார். சகோதரர் என்னிடம் கேட்டார். எனக்குச் சம்மதமில்லை என்று சொல்லிவிட்டேன். அந்தப் பதிலை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஆசிரியர் சாரங்கபாணி மீண்டும் அவர் தம்பிக்கு எழுதினார். வல்லிக்கண்ணன் சிங்கப்பூருக்கு