பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453 வாழ்க்கைச் சுவடுகள் வருவதனால் அவருக்கு நன்மைகளே கிட்டும். தமிழ்நாட்டில் உள்ளதைவிட வளமான வாழ்க்கையைப் பெற முடியும். கோலாலம்பூர் தமிழ்நேசனுக்குப் பணியாற்ற வந்திருக்கும் எழுத்தாளர் கு. அழகிரிசாமி வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக்கொள்ள முடிந்திருப்பதைப் போல வல்லிக்கண்ணனும் பயன் அடையலாம். அழகிரிசாமி போலவே நல்ல இடத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகூட எதிர்ப்படலாம் என்றெல்லாம் அவர் ஆசைகாட்டி எழுதியிருந்தார். தம்பி அந்தக் கடிதத்தை என்னிடம் காட்டினார். நீங்கள் சிங்கப்பூர் போவதே நல்லது என்றார். தமிழ்நாட்டில் இருந்து சிரமப்படுவதை விட, சிங்கப்பூர் சென்று சவுகரியமாக வாழலாம் பணமும் சம்பாதிக்கலாம். அண்ணன் சொல்வது போல, திருமணம் செய்து கொள்வதற்கு நல்ல பெண்ணும் கிடைக்கும் என்று அவர் பங்கிற்கு அவர் ஆசைத் தூண்டில் போட்டார். எனக்குத் தமிழ்நாட்டில் கிடைக்கிற வசதிகளே போதும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறவர்கள் அல்லவா பெண்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் நான் இன்ன மாதிரிதான் வாழ்வது என்று தீர்மானித்துவிட்டேன். நான் தேர்ந்து கொண்ட வாழ்க்கைமுறையில் ஏற்படுகிற சிரமங்கள் எனக்குச் சிரமங்களாகத் தோன்றா என்று தெரிவித்தேன். வாழ்க்கை வசதிகளும் சுகபோகங்களும் தான் முக்கியம் என்று நான் கருதியிருந்தால், எனக்குக் கிடைத்த சினிமா வாய்ப்புகளையே நான் பயன்படுத்தி லாபம் அடைந்திருக்க முடியும் என்றும் சொன்னேன். அதன் பிறகும் நண்பர் ஏன் வலியுறுத்தப் போகிறார். தமிழ்நாட்டில் திறமை உள்ள எழுத்தாளர்களுக்கு- அதிலும் நாங்கள் எண்ணுவதை எங்கள் விருப்பம் போல்தான் எழுதுவோம் என்று தன்மான உணர்வோடு எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு உரிய மதிப்பும் போதிய அங்கீகாரமும் கிட்டுவதில்லை. இதைத் தன்மான உணர்வு மிகுந்த, சுயசிந்தனையும் எழுத்தாற்றலும் நன்கு பெற்றிருந்த சுட நாராயணன் அடிக்கடி சொல்லிவந்தார். எனக்கு எழுதிய கடிதங்களிலும் எழுதினார். இங்குப் பத்திரிகை அலுவலகங்களில் வேலை பார்க்கும் உதவி-துணை-ஆசிரியர்களுக்கு கும்பிடுபோட்டு, நல்லபிள்ளைகளாக நடந்து, அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்து பேசுகிற எழுத்தாளர்கள் வேகமாக வளரமுடியும். அல்லது அரசியல் கட்சி எதையாவது சார்ந்து, அதன் தலைவர்களுக்கு நல்லபிள்ளையாகத் துதிபாடி வாழ்த்தி வணங்குகிறவர்கள் முன்னேறமுடியும். என்னையும் உங்களையும் போன்றவர்களுக்கு வளர்ச்சியே கிடையாது. இந்த நாட்டில். நான் மலேயாவுக்குப் போகிறேன். பின்னர் நீங்கள் அங்கே வரலாம் என்று சுப. நாராயணன் சொல்லிக் கொண்டிருந்தார். அப்படியே அவர் கோலாலம்பூர் போய்ச் சேர்ந்தார். அங்கு நல்ல வேலை ஒன்று அவருக்குக் கிடைத்தது. அத்துடன் மலேயா தமிழ் நேசன்'