பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jä: வாழ்க்கைச் சுவடுகள் - - - or - - - em 5 - ஏன் இவ்வளவு பற்றுதல் என்று எனக்கு விளங்கவேயில்லை என்று துயருற்றிருந்தார் சுப. நாராயணன். 'நான் உருப்பட விரும்பாதவன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். என் மனசுக்குப் பிடித்தபடி வாழ்வதுதான் எனக்கு சந்தோஷம் தரும் என்று நண்பருக்கு எழுதினேன். இதையே இன்னொரு நண்பரிடம் நேரில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1940களில் இந்திரா மாதப் பத்திரிகையின் ஆசிரியராக அறிமுகமாகி எனக்கு நண்பரானவர் ப. நீலகண்டன். கால ஓட்டத்தில் அவர் நாடக ஆசிரியராகி, பின்னர் சினிமாத் துறையில் புகுந்து வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தார். ஏவி.எம். ஸ்டுடியோவில் சேர்ந்து படக்கதை வசனம் எழுதி, அப்புறம் இயக்குநர் ஆக வளர்ந்தார். இடையில் சொந்தமாகப் படம் பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் எங்கள் சந்திப்பு மீண்டும் ஏற்பட்டது. சென்னை மவுண்ட்ரோடில் என் அண்ணாவும் நானும் நடந்து சென்றதைக் காரில் போன அவர் பார்க்க நேரிட்டது. காரைப் பின்னுக்கடித்து எங்கள் அருகில் வரச்செய்து நிறுத்தி, கீழே இறங்கி மகிழ்ச்சியோடு நலம் விசாரித்தார். இப்போது எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், வாழ்க்கைநிலைமை எப்படி இருக்கிறது? என்று பிரியமாக விசாரித்தார். தன்னைப் பற்றியும் சொன்னார். 'வெகு காலத்துக்குப் பிறகு உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடன் நிறையப் பேச வேண்டும் என்று கூறினார். விலாசம் கேட்டு வாங்கிக்கொண்டார், வண்டி அனுப்புகிறேன். ஒருநாள் வாங்க. பேசலாம் என்றார். அவ்விதமே அவரது அழைப்பின் பேரில் அண்ணாவும் நானும் நீலகண்டன் அலுவலகம் சேர்ந்தோம். நல்ல வசதியான இடம் தான். அவர் அன்புடன் வரவேற்று பிரியமாக உபசரித்தார். எங்கள் நலம் அலுவல்கள் பற்றி எல்லாம் விசாரித்தார். பார்த்த சினிமாப்படங்கள் பற்றியும் பேசினோம். அவர் தமது முயற்சிகள், புதிய திட்டங்கள் பற்றிச் சொன்னார். அப்போது அவர் பிடிப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த படத்துக்குக் கதை, வசனம் எழுதுவதில் உதவிபுரிவதற்காக நான் வரமுடியுமா என்று கேட்டார். 'முடியாது. சினிமாத் துறைக்கு வராமலே நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன என்று தெரிவித்தேன். 'உங்களுக்கு நான் ஏதாவது உதவிசெய்யலாம் என்று நினைத்தேன்.