பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 复岔3 ‘என்னை நான் இருப்பது போலவே இருக்கவிடுவதுதான் எனக்குச் செய்கிற பெரிய உதவியாக இருக்கும். நான் படித்தாக வேண்டிய புத்தகங்கள் அதிகம் இருக்கின்றன. எழுத வேண்டியவையும் நிறையவே தான். அவற்றை என் இஷ்டம் போல் செய்துகொண்டிருக்க விடுவதுதான் மற்றவர்கள் எனக்குச் செய்கிற உதவியாகும் என்றேன். அதன் பிறகு அவர் அதிகம் பேசவில்லை. நீங்கள் படித்த நாவல்களில், படிக்கிறவைகளில், சினிமாவுக்கு ஏற்ற நல்ல கதை அம்சம் கொண்டவை இருந்தால் சொல்லுங்க. அவ்வப்போது எனக்குத் தெரியப்படுத்துங்க' என்றார். சிறிது நேரத்தில் நாங்கள் அவரிடம் விடைபெற்றுத் திரும்பிவிட்டோம். இப்படி வலிய வருகிற வாய்ப்புகளை உதறித் தள்ளிக்கொண்டிருப்பது நல்லதில்லை என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். உங்களுக்குப் பரிபூரண திருப்தி அளிக்கக்கூடிய வேலை எதுவும் கிடைக்காது கிடைக்கிறவற்றை உங்களுக்கு உகந்தபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தான். வாழ்வதற்குப் பணம் வேண்டும் தானே? வேலை செய்யாமல் பணம் கிடைத்துவிடாது என்றும் நல்லெண்ணத்தோடு சிலர் கூறினர். - என் மனநிலைக்கு எதுவும் சரிப்பட்டு வராது என்று சொல்லிவந்தேன். சினிமாத் துறைக்குத் திறமையான எழுத்தாளர்கள் தேவையில்லை. படம் பிடிப்பதாகப் பேர் பண்ணிக் கொண்டு பணத்தை, காலத்தை, பிறர் உழைப்பை, ஏகப்பட்ட பொருள்களைப் பாழடித்துக் கொண்டிருப்பவர்களோடு சேர்ந்து தொழில் புரிய எனக்கு இஷ்டமில்லை. சினிமாவில் சேர்ந்து பணமும் புகழும் பெறமுடியும் என்று எதிர்பார்த்தும் ஆசைப்பட்டும் அந்தத் துறைக்குப் போன எழுத்தாளர்கள் உயரவுமில்லை, அவர்களது திறமை சோபிக்கவுமில்லை. அவர்கள் பணம் சம்பாதித்து விடவுமில்லை. உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொண்டே நானும் ஏன் அந்த நச்சுச் சூழலில் சிக்கி நாசமாய்ப் போக வேண்டும் என்று நண்பர்களுக்குப் பதில் அளித்தேன். பத்திரிகைகளுக்கு வேலைக்குப் போகப் பிடிக்கவில்லையென்றால், நீங்களே ஏன் சொந்தப் பத்திரிகை நடத்தி உங்கள் மனம்போல் எல்லாம் எழுதக் கூடாது? என்று சிலர் கேட்டார்கள். எழுதத் தெரிந்த எழுத்தாளர்கள் மட்டுமல்ல அரசியல் மேடைகளில் பேசி முழக்கிப் பெரும்பேச்சாளர்கள் என்று பெயர் பெற்றிருந்தவர்களும் ஆளுக்கு ஒரு பத்திரிகை ஆரம்பிப்பது நடைமுறை நிகழ்வாக இருந்தது. அதிலும், சுதந்திரத்துக்குப் பிறகு பத்திரிகைகள் அதிகமாகவே தோன்றின. அவை நீடித்து நடக்கவுமில்லை. ஒரு சில மாதங்களிலேயே மறைந்து போயின. விடாப்பிடியாக வளரமுயன்ற சில இதழ்கள் ஒரு ஆண்டு காலம் வாழ முடிந்ததே அரும் பெரும் சாதனையாகத்தான் இருந்தது. நாலைந்து வருடங்கள்