பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 薰莎5 அப்படியானால் உங்கள் எழுத்துக்கள் வெளிச்சத்தைக் காணப்போவதில்லை என்றார் அந்த நண்பர். அதனால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது என்று சிரித்தேன் நான். - நீங்கள் பதிப்பகம்தோறும் அலைய வேண்டாம்: பதிப்பக அதிபர்களுக்குக் கடிதங்கள் எழுதி முயற்சிக்கலாமே என்று ஒரு அன்பர் யோசனை கூறினார். அதைச் செய்து பார்க்கலாம் என்று நான் செயலில் இறங்கினேன். சென்னையில் இருந்த முக்கியப் பதிப்பாளர்கள் பலருக்கும் கடிதங்கள் எழுதினேன். 'உங்கள் எழுத்துக்கள் தரமானவை. அவை புத்தகங்களாக வெளிவர வேண்டும் தான். ஆனால் நாங்கள் வெளியிடத் திட்டமிட்டு வைத்துள்ள எழுத்துப் பிரதிகள் ஏராளமாக இருக்கின்றன. இந்நிலையில் உங்கள் சிறு கதைகளை ஏற்றுப் புத்தகமாக வெளியிட இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று 'கலைமகள் பதிப்பகம்’ சார்பில் கி.வா. ஜகன்னாதன் பதில் எழுதியிருந்தார். 'நாங்கள் வெளியிட்டாக வேண்டிய நாமக்கல் கவிஞர் படைப்புகளே மிகுதியாக உள்ளன. வேறு சில முக்கிய நூல்கள் தயாராக வேண்டும். எனவே, உங்கள் எழுத்துக்களைப் புத்தகமாக வெளியிட முடியாமல் இருக்கிறோம். வருத்தம். இப்படி தமிழ்ப்பண்ணை அண்ணாமலை தெரிவித்தார். இந்த விதமாக இன்னும் சிலரும் வருத்தம் தெரிவித்துவிட்டார்கள். சிலர் என் கடிதத்துக்கு எதிரொலி தரவேயில்லை. இருப்பினும் மீண்டும் காலம் எனக்கு உதவிபுரிய முன்வந்தது புத்தக வெளியீட்டுத் துறைக்கே தொடர்பில்லாத ஒரு நண்பர் என் சிறுகதைத் தொகுப்பு ஒன்றைப் பிரசுரிக்க ஆசைப்பட்டார். திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவின் ஆரம்பத்தில் நெய்க்கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார் சென்னியப்பன் என்றொரு அன்பர். அவருக்குத் தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு இருந்தது. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பாலூர் கண்ணப்பமுதலியார் போன்ற அறிஞர்களைத் தெரிந்துவைத்திருந்தார். புதுமை இலக்கியத்திலும் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டிருந்தது. - நான் ஹனுமான் இதழுக்காக உழைத்த காலத்தில், தினந்தோறும் காலையிலும் மாலையிலும் அவர் கடைமுன்பாகப் போய் வருவதைச் சென்னியப்பன் கவனித்திருந்தார். அவராகத் தம்மை அறிமுகம் செய்துகொண்டு பழகலானார். நாங்கள் நண்பர்களானோம். -