பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 வாழ்க்கைச் சுவடுகள் முற்போக்கு இலக்கிய நோக்கு வர்க்க உணர்வை வலியுறுத்தும் பொருளாதார தத்துவப் பார்வையை - மார்க்சியக் கண்ணோட்டத்தை - அடிப்படையாகக் கொண்டது. கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் போற்றுவது. முதலாளித்துவ எதிர்ப்பு முதலாளி வர்க்க ஒழிப்பு பாட்டாளி வர்க்க உயர்வு, பொருளாதார சமத்துவம் முதலியவற்றை இலட்சியமாகக் கொண்டது. இந்த இலக்கிய நோக்கை கம்யூனிஸ்டுக் கட்சிப் பத்திரிகையான 'ஜனசக்தி ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. பின்னர் 'ஜனயுகம்', 'புதுமை இலக்கியம் என்று சில இதழ்கள் தோன்றின. இவை சில காலம் பணிபுரிந்து விட்டு மறைந்து போயின. - முற்போக்கு இலக்கிய மனோபாவம் தமிழ்நாட்டில் சிறிது சிறிதாகப் பரவி வந்தது. என்றாலும், முற்போக்கு இலக்கியப் பத்திரிகை என்று எதுவும் இல்லாதிருந்தது. அந்தக் குறையைக் போக்குவதற்காக, தொ.மு.சி. ரகுநாதன் 1954 டிசம்பரில், திருநெல்வேலியிலிருந்து 'சாந்தி மாத இதழை வெளியிட்டார். 'சாந்தி நடந்து கொண்டிருந்தபோதே, வ. விஜயபாஸ்கரன் சென்னையில் சரஸ்வதி' என்கிற முற்போக்கு இலக்கிய இதழை ஆரம்பித்து நடத்தலானார், 1955 மே மாதம் முதல். சில வருடங்களுக்குப் பிறகு தலைவர் ப. ஜீவானந்தம், கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கிய ஏடு ஆக, தாமரையைத் தொடங்கினார்.1958இல், திராவிட இயக்கம் வேகமும் வலுவும் பெற்று வந்த காலத்தில், தலைவர் சி.என். அண்ணாதுரை தமிழர் மறுமலர்ச்சி தமிழ் இன மறுமலர்ச்சி என்ற ரீதியில் பேசியும் எழுதியும் வந்ததால், 'மறுமலர்ச்சி எனும் சொல் வேறு பொருள் ஏற்றது. அதனால், தனி இலக்கியவாதிகள் மறுமலர்ச்சி இலக்கியம்' 'மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் எனக்குறிப்பிடுவதைக் குறைத்துக் கொண்டார்கள். மெதுமெதுவாக அவ்வழக்கம் மறைந்தும் விட்டது. தூய இலக்கியம், ஆழ்ந்த இலக்கியவாதிகள் போன்ற சொற்கள் வழக்கத்துக்கு வந்தன. மணிக்கொடி எழுத்தாளர்களின் தாக்கத்தைப் பெற்று, அவ்வழியில் எழுதிய நான் மறுமலர்ச்சி இலக்கிய எழுத்தாளனாக மதிக்கப்பட்டேன். தேசீயவாதிகள் நடத்திய பத்திரிகைகளிலேயே என் எழுத்துக்கள் அதிகம் வந்தன. காந்திஜீயின் இலட்சியங்களிலும் கொள்கைகளிலும் எனக்கு ஈடுபாடு இருந்தது. ஆயினும் அரசியலில் எனக்கு நாட்டமோ ஆர்வமோ கிடையாது. பெரியாரின் எழுத்துக்கள், அவை வெளிவந்த பத்திரிகைகளை நான் படித்ததில்லை. அவருடைய பகுத்தறிவுச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒன்றிரண்டு சிறுவெளியீடுகளைப் படித்தது உண்டு. நான் பகுத்தறிவுச் சிந்தனைகளை எழுதுவதில் ஈடுபாடும் வேகமும் கொண்டது இங்கர்சால், வால்டேர், ரூசோ, பெர்னாட்ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் போன்ற