பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வாழ்க்கைச் சுவடுகள் நடை, தலைஎழுத்து, கசடதபற, அஃக்,ங் என்றெல்லாம் பெயர் சூட்டத்துணிந்தார்கள். சிசு செல்லப்பாவின் எழுத்து தான் சரியான சிற்றிதழ் (லிட்டில் மேகசின் ஆகும். அதற்கு முன் நடத்தப்பட்ட இலக்கிய இதழ்கள் பலவும் தன்மையினால் சிற்றிதழ்கள் என மதிக்கப்பட்டன. ஆயினும் அவை பெரிய பத்திரிகைகள் போல் பரவலாக எங்கும் செல்ல வேண்டும். அதற்கு வகை செய்யக்கூடிய விதத்தில் பற்பல ஊர்களிலும் ஏஜண்டுகள் நியமிக்க வேண்டும் என்று திட்டமிட்டு. அதற்குத் தேவையானவற்றைச் செய்து வந்தன. ஆனால் எழுத்து அப்படிப்பட்டது அல்ல. எழுத்து குறைவான எண்ணிக்கையிலேயே அச்சாகும். கடைகளில் விற்பனைக்குக் கிடைக்காது. சந்தாதாரர்களுக்கு மட்டுமே பிரதிகள் கிடைக்கும். அட்டை, அட்டைப்படம் என்றெல்லாம் கவனம் செலுத்தாது. கனமான விஷயங்களே முக்கியம். இப்படித் திட்டவட்டமாக வரையறுத்துக்கொண்டு பத்திரிகையைத் தொடங்கினார் செல்லப்பா, - அவர் இலக்கிய விமர்சன வளர்ச்சி கருதியே எழுத்து'வை ஆரம்பித்தார். ஆனால் அவரே எதிர்பாராத விதத்தில், புதுக்கவிதையை வளர்க்கும் ஒரு சக்தியாக வலுப்பெற்றது எழுத்து. எழுத்து 1959 ஜனவரி மாதம் தோன்றியது. விமர்சனக் கட்டுரைகள், புதுக்கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு என்று பலவகை விஷயங்களையும் அளித்தது. ஜீவனாம்சம் என்ற புதுமையான நாவலை தொடர்கதையாக சி.சு. செல்லப்பா எழுதினார். எழுத்து 500 பிரதிகளே அச்சிடப்பட்டன. ஒன்பதரை வருடங்கள் மாத இதழாகச் சிரமத்துடன் வாழ்ந்த அது பத்தாவது ஆண்டில் காலாண்டிதழாக மாற்றப்பட்டது. அப்படியும் அது வெற்றிகரமாக வளர இயலவில்லை. பன்னிரண்டாம் ஆண்டில், 19வது ஏட்டுடன் எழுத்து நின்று விட்டது. செல்லப்பாவின் பிடிவாதமும், இலக்கியப் பற்றும் கடின உழைப்பும்தான் கருத்து ஆழமும் கனமும் கொண்ட இலக்கியப் பத்திரிகை'யை அவ்வளவு காலம் நீடித்திருக்கச் செய்தன. பின்னர், சாதனைகள் புரிந்த இலக்கிய ஏடு ஆக எழுத்து வரலாற்றில் இடம் பெற்றது. எழுத்துக்காக சி.சு. செல்லப்பா அனுபவித்த பணநஷ்டமும் கஷ்டங்களும் அதிகம்தான். அதற்காக அவர் வருத்தப்பட்டதில்லை. எழுத்து-பத்திரிகையில் நான் அதிகம் எழுதியதில்லை. சில கவிதைகள், சில கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள், ஒரு சிறுகதை என்று குறைந்த அளவிலேயே எனது எழுத்துக்கள் எழுத்துவில் வந்துள்ளன. -