பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் £85 ஆயினும் செல்லப்பா என்னிடம் மிகுந்த அன்பும், நட்பும், மதிப்பும் கொண்டிருந்தார். அவருடைய எழுத்துக்களை வர்த்தக நோக்கு நூல் வெளியீட்டாளர்கள் புத்தகங்களாக வெளியிட மனம்கொள்ளவில்லை. அதனால் என்ன, என் எழுத்துக்களை நானே புத்தகமாக வெளியிடுவேன் என்ற கூறி எழுத்துப் பிரசுரம் ஆரம்பித்தார் அவர். அவருடைய எழுத்துக்களைப் புத்தகங்களாக் அச்சிடுவதுடன் அமையாது. அவர் அன்பும் மதிப்பும் வைத்திருந்த எழுத்தாளர்கள் சிலபேரின் எழுத்துக்களையும் புத்தகங்களாக வெளியிட முன்வந்தார். வரா. ந. பிச்சமூர்த்தி, 'சிட்டி சுந்தரராஜன் படைப்புகளை அவ்விதம் புத்தகங்களாக்கினார். அவற்றுடன் என் சிறுகதைகளையும், அவரே விரும்பிக் கேட்டு 'ஆண்சிங்கம் என்ற தொகுப்பாக வெளியிட்டார். பின்னர் அமரவேதனை' எனும் கவிதைத் தொகுப்பையும், 1977இல் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை நூலையும் எழுத்துப் பிரசுரம் களாகக் கொண்டு வந்தார். அவற்றுக்கு உரிய பணத்தையும் அவர் தரத் தவறவில்லை. சி.சு. செல்லப்பா காந்தீயவாதி. சுதந்திரப் போராட்ட தியாகி. மிக எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார். இலக்கியத்தில் தீவிரமான பற்றுதல் கொண்டிருந்தார். எப்பவும் அவர் இலக்கிய விஷயங்களையே பேசினார். தமிழ் இலக்கியத்துக்கு என்னென்ன செய்யப்பட வேண்டும் என்று திட்டங்களிட்டுப் பேசுவதில் அவர் மிகுந்த உற்சாகம் கண்டார். மிகுந்த பிடிவாத குணம் கொண்டவர் அவர், செல்லப்பா எழுத்துப் பிரசுரம் தொடங்கி, புத்தகங்கள் வெளியிட்டபோது, அவற்றை விற்பனை செய்வதற்கு அவர் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பொதுவான புத்தக விற்பனையாளர்கள், இதர நூல் வெளியீட்டாளர்களது உதவியை அவர் நாடினார். இந்தப் புத்தகமெல்லாம் விற்பனையாகாது என்று அவர்களில் பலர் மறுத்துவிட்டார்கள். தெரிந்த - பழகிய புத்தகப் பிரசுரகர்கள் - அவருக்காகப் புத்தகங்களின் சில பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்கள். பல மாதங்களுக்குப் பின்னர், விலை போகவில்லை என்று கூறி, அழுக்கடைந்த நிலையில், அவரது புத்தகங்களை அவரிடமே திருப்பிக் கொடுத்தார்கள். வியாபாரிகளின் மனநிலையையும் தன்மையையும் புரிந்துகொள்ள உதவிய வாய்ப்புகள் இவை என்று அவர் கருதினார். அதற்காக மனம் சோர்ந்துவிடவில்லை. என் புத்தகங்களை இவர்கள் விற்றுத்தராவிட்டால் போகட்டும் நானே அவற்றை விற்பன்ை செய்வேன் என்று உறுதிபூண்டார் செல்லப்பா, தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், மேல் நிலைப்பள்ளிகளின் பட்டியல் தயாரித்தார் - மாவட்ட ரீதியாக "எழுத்துப் பிரசுர வெளியீடுகளை இரண்டு பைகளில் நிரப்பி எடுத்துக் கொண்டு, மாவட்ட ரீதியாகச் சென்று, கல்லூரி கல்லூரியாகப் போனார்.