பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

išč வாழ்க்கைச் சுவடுகள் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளுக்குச் சென்றார். அங்குள்ள நூல்நிலையங்களுக்காகப் புத்தகங்கள் வாங்கும்படி செய்தார். அவரது அலைச்சலுக்கும் முயற்சிக்கும் நல்ல பலன் கிடைத்தது. புத்தகங்கள் திருப்திகரமாக விற்பனையாயின. புத்தக விற்பனைக்காக சிசு செல்லப்பா திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்ய வந்தபோது, நானும் அவருடன் சேர்ந்துகொண்டேன். இரண்டு மாத காலம் நாங்கள் சுற்றித் திரிந்தோம். அது நடந்தது 1974இல் அது பற்றிப் பின்னர் பேசலாம். தொழில்முறைப் புத்தக வெளியீட்டாளர்களிலும், இலட்சிய நோக்கும் இலக்கிய ஈடுபாடும் எழுத்தாளர்களை விலைபோகக்கூடிய எழுத்துக்களை உற்பத்திசெய்வோர்களாக அல்லாது கலைஞர்களாகவும் மனிதநேயம் உடையோராகவும் மதிக்கும் பண்டாடும் உடைய ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அபூர்வமானவர்கள். - இப்படி அபூர்வமானவர்களில் விசேஷமாகக் குறிப்பிடத் தகுந்தவர் 'கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, நாகப்பட்டினத்தில் இமயப் பதிப்பகம் ஆரம்பித்து அதைத் தொழில் ரீதியில் வெற்றிகரமாக வளர்த்துவந்த தோ. ந. வீரராகவன் மாசிலாமணியின் நண்பர் ஆவார். அவரும் இலக்கியத்தில் ரசனையும் ஈடுபாடும் உடையவர்தான். வீரராகவன் உந்துதலில், மாசிலாமணியும் புத்தகப் பிரசுரத்தில் ஈடுபட முன்வந்தார். சென்னைக்கு வந்து கலைஞன் பதிப்பகம் தொடங்கினார். அவருடைய இலக்கிய ரசனையும் ஈடுபாடும். கனத்த புதுமையான சிந்தனைகள் மீதுள்ள ஈர்ப்பும் அவரை வழக்கமான புத்தகங்களை வெளியிடுவதில் ஆர்வம் கொள்ளச் செய்யவில்லை; புதுமையும் நயமும் நிறைந்த இலக்கியப் படைப்புகளை வெளியிடும்படி தூண்டின. எனவே, லா.ச. ராமாமிர்தம் சிறுகதைகளைத் தொகுத்துச் சில புத்தகங்கள் வெளியிட்டார். சிந்தனை நூல்களையும் பிரசுரித்தார். அந்நாட்களில் சென்னை தியாகராயநகரில் பாண்டிபஜாரில் ஒரு பெரிய கட்டிடத்தின் மாடியில் அநேகப் பதிப்பகங்கள் இடம் பெற்றிருந்தன. மாடியின் ஆரம்பத்தில் முன்னதாக ஒரு அறையில் கலைஞன் பதிப்பகம் இருந்தது. அதற்கு எதிர் வரிசையில் வானதி பதிப்பகம், குயிலன் பதிப்பகம் மற்றும் சில நிறுவனங்கள் இருந்தன. வானதி பதிப்பகத்துக்கு நல்ல வியாபாரம். எளிதில் விற்பனையாகக்கூடிய வாசகர்கள் விரும்பி வரவேற்ற - புத்தகங்களை அது வெளியிட்டது.