பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五プ2 வாழ்க்கைச் சுவடுகள் பெரிய விடும் எஞ்சியிருந்தன. பாகப்பிரிவினை செய்யப்படாத பொதுச் சொத்து ஆகி. 1974 ஆரம்பத்தில் பெரிய அண்ணாச்சி இறந்து போனார். அதன் பிறகும் நான் ராஜவல்லிபுரத்திலேயே தங்கினேன். இம்முறைதான் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நான் அந்த ஊரிலேயே வசிக்க நேரிட்டது. இச்சந்தர்ப்பத்தில்தான் வண்ணதாசன், வண்ணநிலவன், விக்ரமாதித்யன் எனப் பின்னர் பெயர்சூடிக் கொண்ட அ. நம்பிராஜன் ஆகியோரின் கடிதத்தொடர்பும், பின் நேரடிப் பழக்கமும் கிட்டின. வண்ணதாசன் என்கிற எஸ். கல்யாணசுந்தரம், தி.க, சிவசங்கரனின் மகன். அப்போது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கடிதத் தொடர்பு கொண்டார். பிறகு ராஜவல்லிபுரத்துக்கு வந்து பார்த்தார். நம்பிராஜன் பாபநாசம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர், சகமாணவரான பெருங்குளம் ரங்கநாதனுடன் என்னைக் காணவந்தார். பாளையங்கோட்டையில் வக்கீல் குமாஸ்தாவாக இருந்த உநா. ராமச்சந்திரன், தாமரையில் வந்த எனது கதைகளைப் படித்துவிட்டு எனக்குக் கடிதம் எழுதினார். தமது எழுத்தார்வத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒரு புனைபெயர் தேடித் தரும்படி என்னைக் கேட்டபோது நான் அவருக்கு 'வண்ணநிலவன்' என்ற பெயரைச் சூட்டினேன். இம்மூவரும் நெருங்கிய நண்பர்களானார்கள் அவ்வப்போது-என் அம்மாவும் அண்ணாச்சியும் வாழ்ந்த நாட்களிலேயே ராஜவல்லிபுரம் வந்து, என்னுடன் உரையாடி மகிழ்ந்தார்கள். இடைசெவல் கி. ராஜநாராயணன், தென்காசி தீப, நடராஜன் ரசிகமணி டி.கே.சி.யின் பேரன்), ராஜபாளையம் த.பீ. செல்லம், கொ.ச. பலராமன், நாச்சியார்பட்டி சுப.கோ. நாராயணசாமி முதலிய நண்பர்கள் பலரும் ராஜவல்லிபுரம் வந்திருக்கிறார்கள். 'சும்மா பார்த்துப் பேசிப் போவதற்காகத்தான். அம்மா திடமாக இருந்த காலத்தில், அந்தப் பெரிய வீட்டைப் பெருக்குவது மெழுகுவதுமுதல் வீட்டு வேலைகள் அனைத்தையும் அம்மாவே செய்துகொண்டிருந்தாள். கொஞ்சம் தள்ளாமை ஏற்பட்டதும், வாசல் தெளிக்கப் பெருக்க', வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க, பாத்திரங்கள் கழுவ என்று சில வேலைகளைக் கவனிப்பதற்காக ஒரு வேலைக்காரியை நியமித்துக் கொண்டாள். அப்படி வந்தவள் இசக்கி என்கிற முத்தம்மாள். முத்தம்மாள் எனும் மறவர்மகள் தனியாக இருந்தாள். அவள் கணவன் அவளை விலக்கிவிட்டுத் தேவமார் தெருவில் வசித்தான். அவர்களுக்கு இரண்டு பெண்கள். மூத்த மகளுக்குப் பக்கத்துக் கிராமத்தில்