பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 17.3 கல்யாணமாகியிருந்தது. இரண்டாவது மகள் அப்பனோடு இருந்தாள். தாய் எங்கள் வீட்டுக்கு வந்த சில வருடங்களில் இரண்டாவது மகளுக்குச் சீவலப்டேரியில் திருமணமாயிற்று, எங்கள் அம்மா முத்தம்மாளை இசக்கி என்றே கூப்பிட்டு வந்தாள். முத்து என்பது மாமனார் பெயர் என்பதால், அதை அவள் கூறுவதில்லை. முந்தைய தலைமுறைப் பெண்கள் கணவன், மாமனார் மாமியார், மச்சினர் போன்ற மூத்தவர்களின் மரியாதைக்குரிய உறவின் முறையாரது பெயர்களை உச்சரிப்பதில்லை. அவற்றைச் சொல்வது பெரியவர்களை அவமதிப்பது போலாகும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. இது ஒரு மரபு ஆகவே நிலைபெற்றிருந்தது. கால வேகத்தில் இத்தகைய பழக்கவழக்கங்கள் அடிப்பட்டுப் போயின. அம்மாவின் வயது அதிகமாக ஆகப் பலவீனங்களும் கூடின. கண்பார்வை மங்கிப் பிறகு முற்றிலும் தெரியாமலே போய்விட்டது. அதனால் சமையல் முதல் சகல வேலைகளையும் முத்தம்மாள் என்கிற இசக்கியே செய்யவேண்டிய நிலைமை எற்பட்டது. அவளும் குடும்பத்தில் ஒரு நடர் ஆனாள். அம்மா இறக்கும் போதும், அண்ணாச்சி இறப்பதற்கு முன்னரும், 'இசக்கி நம்மை நம்பி நம்ம வீட்டோடவே இருந்து விட்டாள். அவளுக்கு வேற வழி இல்லை. அவள் இனிமேலும் எப்போதும் போல் இந்த வீட்டிலேயே இருக்கட்டும் என்று என்னிடம் தெரிவித்தார். அவர்கள் வாக்கைக் காப்பாற்றுவதற்காக நானும் அந்த முதியவளை எப்பவும் போல் வீட்டிலேயே வசித்து, வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவளை நம்பி அவளிடமே விட்டுவிட்டேன். அவள் அத்தகைய நம்பிக்கைக்கு உரியவளாக நடந்து கொள்ளவில்லை. அது பற்றி உரிய இடத்தில் கவனிக்கலாம். என்னைப் பார்த்துப் பேசிப்போகலாம் என்று ராஜவல்லிபுரம் தேடி வந்தவர்களில் தஞ்சை ப்ரகாஷ் முக்கியமானவர். தஞ்சாவூர் ப்ரகாஷ் தனிரகமான மனிதர். நல்ல ரசிகர். இலக்கியவாதி. படிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். பல மொழிகள் பயின்றவர். மலையாள இலக்கியங்களை அம்மொழியிலேயே படித்து ரசித்தவர். உலக இலக்கியங்களை ஆங்கிலம் மூலம் நன்கு அறிந்தவர். இந்தியாவில் பல மாநிலங்களிலும், உல்லாசமாகவும் ஏதாவது தொழில் காரணமாகவும் சுற்றித் திரிந்து அனுபவ வளம் பெற்றவர். தமிழ் இலக்கியங்கள், புதிய படைப்புகள், பத்திரிகைகளை ஆர்வத்தோடு படித்து மகிழும் பண்பினர். நல்ல எழுத்தாளர்களின் நட்பை விரும்பிப் பெற்று வளர்க்கும் இயல்பினர். எம்.வி. வெங்கட்ராமின் நெருங்கிய நண்பர் க.நா. சுப்ரமண்யம், ந.பிச்சமூர்த்தி ஆகியோரது அன்பையும் மதிப்பையும் பெற்றவர்.