பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

運プ6 வாழ்க்கைச் சுவடுகள் அறிந்து கொள்வதில் அக்கறை காட்டியதும் இல்லை. நான்பாட்டிற்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். சகல வகை எழுத்துக்களையும் எழுதினேன். இதயஒலி என்ற கையெழுத்துச் சஞ்சிகையிலும் நிறைய எழுதி வைத்தேன். வருடக்கணக்கில், நானும் இந்த உலகமும் என்று பெரிய பவுண்டு நோட்டுகளில் எனது அனுபவங்களை, நான் சந்தித்தவர்களை கண்டு களித்த வாழ்க்கை விநோதங்களைப் பற்றி எல்லாம் எழுதி வைத்தேன். இவை டயரிகள் இல்லை. மாதவாரியாக எழுதப்பட்ட ரசமான குறிப்புகள். அவை எல்லாம் அச்சில் வந்ததில்லை. என்னைப் பார்க்க வருகிற நண்பர்களும் ரசிகர்களும் அவற்றைப் படித்து மகிழ்வார்கள். அவற்றைப் படிப்பதற்கென்றே சிலர் அடிக்கடி வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில், அச்சில், பத்திரிகையில் வெளிவரும் இலக்கிய வரலாற்றுக் கட்டுரைத் தொடர் எவ்வளவுக்கு விரும்பிப் படிக்கப்பட்டது. படித்தவர்கள் எப்படி மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள் என்று நான் தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு எனக்கு 1974இல் கிட்டியது. அவ் வருட ஆரம்பத்தில் என் பெரிய அண்ணாச்சி இறந்து விட்ட பிறகும் நான் ராஜவல்லிபுரத்திலேயே தங்கியிருந்தேன். அச்சமயம் எழுத்துப் பிரசுரம் வெளியீடுகளைத் திருநெல்வேலி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காகத் திருநெல்வேலி வரத் திட்டமிட்டிருப்பது பற்றி சிசு செல்லப்பா எனக்குக் கடிதம் எழுதினார். நான் அவருக்கு உதவி புரிய இயலுமா என்றும் கேட்டிருந்தார். 'நான் இப்போது கட்டற்று இருக்கிறேன். உங்களோடு சேர்ந்து சுற்ற நான் தயார்' என்று எழுதினேன். அதனால் அவர் மிகுந்த உற்சாகம் அடைந்தார். அதிக அளவில் புத்தகங்களைப் பார்சலில் அனுப்புகிறேன். நான் வந்து பார்சல்களை எடுக்கலாம். அவற்றை உங்கள் வீட்டில் வைத்துவிட்டு, சிறிதுசிறிதாக எடுத்துச் சென்று விற்பனையைக் கவனிக்கலாம் என்று செல்லப்பா தெரிவித்தார். புத்தகப் பொதிகளைத் திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து ராஜவல்லிபுரம் வீட்டுக்குக் கொண்டு போவது சிரமம். எனவே அருகில் சிந்துபூந்துறையில் சண்முகம் பிள்ளை அண்ணாச்சி வீட்டில் பத்திரப்படுத்துவது நாங்கள் ராஜவல்லிபுரம் வீட்டில் தங்குவது அன்றாடம் வந்து தேவைப்படும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு கல்லூரி கல்லூரியாகப் போகலாம். இதுவே வசதியானது என்று கருதினேன். செல்லப்பா வந்ததும் என் எண்ணத்தை அவரிடம் சொல்ல, அவரும் ஒப்புக்கொண்டார். அவரையும் அழைத்துக் கொண்டு அண்ணாச்சியைக் காணச் சென்று அறிமுகம் செய்து, விஷயத்தைச் சொன்னேன். சண்முகம் பிள்ளை அண்ணாச்சி மிகுந்த மகிழ்ச்சியோடு உதவ முன்வந்தார். இந்த