பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் fg3 அண்ணா எழுதினார். எனவே ஒரு வாரம் முன்னதாகவே சென்னை சேர்ந்தேன். அப்படி வந்தது நல்லதாயிற்று தீபாவளிக்கு முதல்நாளிலிருந்து பெரிய மழை தொடங்கியது. தீபாவளி அன்று பேய் மழை வெளுத்து வாங்கியது. அன்று இரவு நான் ரயிலில் வந்திருந்தால் பல சிரமங்களை அனுபவிக்க நேரிட்டிருக்கும். நான் சென்னை வந்ததும் நண்பர் நா. பார்த்தசாரதி ஒரு வேண்டுகோள் விடுத்தார். கல்கத்தாவில் தமிழ்ச்சங்கம் நண்பர்கள் நாவல் நூற்றாண்டு’ கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்கள். முக்கிய எழுத்தாளர்களை அழைத்து வரும்படி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். நான் அசோகமித்திரன், ஞானக்கூத்தன், மு. மேத்தா, சேவற்கொடியோன், 'ஹிந்து பத்திரிகையில் பணிபுரியும் நடராஜன் ஆகியோர் போகிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கம். அவசியம் வாங்க என்று அழைத்தார். போய் வரலாமே என்று எண்ணினேன். இசைவு தெரிவித்தேன். நாங்கள் ஏழு பேரும் கல்கத்தா சென்ற பயணம் மிக முக்கியத்துவம் பெற்றதாகிவிட்டது. நவம்பரில் மழை விடாது பெய்தது. கடலில் புயல் சின்னம் தோன்றியிருந்தது. புயல் சென்னையைத் தாக்கலாம், திருவல்லிக்கேணியை அது சாடக்கூடும் என்ற பயமுறுத்தல்களும், எதிர்பார்ப்புகளும் நிலவின. நாங்கள் தனித்தனியாக சென்ட்ரல் ஸ்டேஷன் அடைந்தோம். மழையோடு மழையாகத் தான். மழையோடு தான் புறப்பட்டது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்'. பிரயாணம் நன்றாக அமைந்தது. எனினும், சென்னை நகரம் என்ன ஆகுமோ என்ற கவலை பலருக்கும் இருந்தது. வளம் நிறைந்த பிரதேசங்கள். பசிய வயல்கள், மரங்கள் செறிந்த வனவெளிகள், பெரிய நதிகள் என்று இயற்கைக் காட்சிகளையும், மனிதர்களின் உழைப்பால் பொலிவும் புதுமையும் பெற்றுத் திகழும் நகரங்களின் வனப்புகளையும் கண்டுகளித்தபடி நாங்கள் பயணம் செய்தோம். புயலையே மறந்து விட்டோம். போகப் போக மழையும் இல்லாது போனது. நாங்கள் கல்கத்தா போய்ச் சேர்ந்த உடன். எங்களை வரவேற்பதற்காகக் காத்து நின்ற நண்பர்கள் மிகுந்த சந்தோஷம் கொண்டார்கள். நிம்மதிப் பெருமூச்சு உயிர்த்தார்கள். நல்லபடியாக வந்து சேர்ந்தீர்களே. அது ரொம்ப சந்தோஷம் தருகிறது. நீங்கள் வந்த எக்ஸ்பிரசுக்கு என்ன நேருமோ, ஒழுங்காக அது கல்கத்தா வந்து சேருமோ சேராதோ என்ற பயம் எங்களுக்கு என்று சொன்னார்கள். 'ஏன், என்ன விஷயம்? ೧ಕಣ೧೯T எப்படி இருக்கிறது? எனக் கேட்டார் நா.பா.