பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 வாழ்க்கைச் சுவடுகள் சென்னைக்கு ஒன்றுமில்லை. அது நன்றாகத் தான் இருக்கிறது. எதிர்பார்த்தபடி புயல் சென்னையைத் தாக்கவில்லை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி காப்பாற்றிவிட்டார். புயல் உங்களுக்குப் பின்னாலேயே வந்திருக்கிறது. உங்கள் ரயிலைத் துரத்திக் கொண்டே வந்துள்ளது. ஆந்திராவை அது பலமாகத் தாக்கியுள்ளது. ரயில் பாதையை நாசமாக்கி விட்டது. அநேக ரயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டுவிட்டன. அதனால்தான் கோரமண்டல் எக்ஸ்பிரசுக்கு என்ன ஆகுமோ என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது என்று அன்பர்கள் தெரிவித்தார்கள். அந்த வருடம் கல்கத்தாவில் தமிழ் நாவல் நூற்றாண்டு விழா சந்தோஷத்துடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதல் தமிழ் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் 1877இல் எழுதிமுடிக்கப்பட்டது. எனவே 1977 தான் நாவல் நூற்றாண்டு ஆகும் என்றொரு கருத்து இருக்கிறது. அந்த நாவல் நூலாக அச்சிடப்பட்டு 1879இல் தான் வெளிவந்தது. ஆகவே 1879தான் நாவல் நூற்றாண்டு என்று இன்னொரு கருத்தும் உள்ளது. கல்கத்தாவிலும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும் 1977இல் நாவல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை வசித்த மாயவரத்திலும் மயிலாடுதுறை) மற்றும் சில ஊர்களிலும் 1979இல் தமிழ் நாவல் நூற்றாண்டு விழா இனிது நிகழ்ந்தது. கல்கத்தாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் நாவல் விழா கொண்டாடிய நாங்கள் திட்டமிட்டபடி மூன்றாம் நாளே அங்கிருந்து புறப்பட் இயலவில்லை. புயலினால் பாதிக்கப்பட்டு பல இடங்களில் தண்டவாளங்கள் பெயர்ந்து போயிருந்தன. அவற்றைப் பழுதுபார்த்துச் செம்மைப்படுத்திய பின்னரே சென்னைக்கு ரயில் வண்டிகள் போகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஒரு வார காலம் தேவைப்பட்டது. நாங்கள் ஒரு வாரமும் கல்கத்தாவில் தங்கினோம். கல்கத்தாவையும், அந்நகரில் பார்க்கவேண்டிய இடங்கள் பலவற்றையும் கண்டு களித்தோம். கல்கத்தா இலக்கிய நண்பர்களின் விருந்து உபசாரம் போற்றப்பட வேண்டியதாகும். ரயில் போக்குவரத்து சீர்பட்டதும், கல்கத்தா நண்பர்கள் கோரமண்டல எக்ஸ்பிரசில் எங்களை அனுப்பிவைத்தார்கள். திரும்பியபோது ஆந்திரப் பிரதேசத்தில் நாங்கள் பார்க்க நேர்ந்த காட்சிகள் கோரமானவை. அருவருப்பும் பயஉணர்வும் எழுப்பக்கூடியனவாக இருந்தன.