பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் #93 உன்னாலே இதைச் செய்ய முடியாது என்று மட்டம் தட்டினால், உருப்படக் கூடியவன்கூட வளர்ந்து முன்னேற மாட்டான்' என்று. பாரதியும் வராவும் காட்டிய வழியிலேதான் நானும் நடக்கிறேன் என்று நான் சொல்லி வருகிறேன். . 30 தீபம் மாத இதழில் நான் எழுதி வந்த புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரைத் தொடர் நிறைவு பெற்றதும், அக்கட்டுரைகள் நூல் வடிவில் வெளி வரவேண்டியது அவசியம் என்று பலரும் கருதினர் நண்பர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்தனர் ஆனால், வணிக நோக்குப் புத்தக வெளியீட்டாளர் எவரும் அதை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. நண்பர் நா. பார்த்தசாரதி அவருக்கு நன்கு தெரிந்திருந்த பிரசுரகர்த்தர்களிடம் எடுத்துச் சொன்னார். ஆயினும், இது போன்ற விஷயங்கள் விலைபோகா இதை நூலாக வெளியிடுவது நட்டமாகவே முடியும் அதனால் புத்தகமாகப் போடவிரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்கள். அவர்களுடைய இந்த மனநிலைமை எண்ணி நா.பா. ரொம்பவும் வருத்தப்பட்டார். நண்பர் சி.சு. செல்லப்பா, 'இதை நானே வெளியிடுவேன். இது எழுத்து பிரசுரமாகத் தான் வெளிவரவேண்டும். ஆனால் இப்போதே உடனடியாகப் பிரசுரிக்க இயலாது என்று சொன்னார். இந்தச் சமயத்தில் கவிஞர் மீரா, அவருடைய அன்னம் வெளியீடு வாயிலாக அதை வெளியிட விரும்பினார். ஒரு வகையில், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வரலாறு எழுதப்படுவதற்கு நான் தூண்டுதலாக இருந்தேன். அப்போது நான் எண்ணியபடி இலக்கிய இதழ் தொடங்கி நடத்த முடியாமல் போயிற்று. இப்போது அதை நானே நூல் வடிவில் கொண்டு வர விரும்புகிறேன் என்று மீரா எனக்கு எழுதினார். அநேக வருடங்களுக்கு முன்னர் கவிஞர் மீராவும் கவிஞர் அப்துல் ரகுமானும் சேர்ந்து, 'ஆல்' என்ற பெயரில் ஓர் இலக்கிய இதழ் வெளியிடத் திட்டமிட்டார்கள். அப்போது இருவரும் ராஜவல்லிபுரம் வந்து என்னைச் சந்தித்தார்கள். 'ஆல்' பத்திரிகையில் நான் ஓர் இலக்கியக் கட்டுரைத் தொடர் எழுத வேண்டும் என்றும், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்தே எழுதலாம் என்றும் கோரினார்கள். நானும் இசைவு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி 'ஆல்' பத்திரிகையைத் தொடங்கவில்லை. 'தீபம்' இதழில் சரஸ்வதி காலம் தொடரை எழுதி முடித்ததும், அடுத்து ஒரு தொடரை எழுத வேண்டும் என்று நா.பா. கேட்டுக்