பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வாழ்க்கைச் சுவடுகள் வளர்ந்தார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவிலும் பணிபுரிந்தார். ஒரு காலகட்டத்தில் விறுவிறுப்பான மர்மநாவல்கள். துப்பறியும் கதைகள் எழுதிப் பெயர் பெற்றார். ஒரு சந்தர்ப்பத்தில். 'சுதேசமித்திரன்’ நாளிதழைக் காங்கிரஸ் கட்சி ஏற்று, தலைவர் பக்தவத்சலம் பொறுப்பேற்று நடத்திய காலத்தில் மேதாவி கோதச. அதன் ஆசிரியராகச் செயலாற்றினார். அப்போது அபயானந்தா என்ற பெயரில் ராசிபலன் எழுதலானார். சுதேசமித்திரன் நின்றுவிட்ட பிறகு, அபயானந்தா ராசிபலன் புத்தகம் வெளியிட முன்வந்தார். ஒவ்வொரு ராசிக்கும், தனித் தனியாக விரிவாக பலன்கள் எழுதித் தனித் தனிப் புத்தகங்களாகத் தயாரித்தார். ஒரு புத்தகம் விலை ஒரு ரூபாய் பன்னிரண்டு ராசிகளுக்கும் பலன்கள். ஒரு ராசிக்குப் பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டார். அவற்றைக் காரில் வைத்துத் தமிழ் நாடு எங்கும். ஊர் ஊராகப் போய், விற்பனையாளர்களைப் பிடித்து, விற்க ஏற்பாடுகள் செய்து பிசினஸ் பண்ணினார். ஒரு சமயம் அவர் என்னிடம் சொன்னார். 'இது ரொம்ப லாபகரமான பிசினஸ் ஒரு ராசிக்குப் பத்தாயிரம் புத்தகம் ஒரு புத்தகம் விலை ஒரு ரூபாய். பத்தாயிரம் புத்தகமும் நிச்சயம் விற்பனையாகும் ஏஜன்சி கழிவு போக, ரொக்கமாகக் கையிலே காசு. இப்படி பன்னிரண்டு ராசிகளுக்கும், பத்தாயிரம் வீதம் கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள். கதை, நாவல் எல்லாம் நிச்சய விற்பனை பெறுவதில்லை. ராசிபலன் சுடச்சுட விற்பனையாகுது. சுதேசமித்திரனில் அபயானந்தா ராசிபலன் எழுதியபோது கவனித்தேன். ராசிபலன் வெளியாகிற அன்றைக்குப் பத்திரிகை அதிகமான பிரதிகள் அச்சிடுவார்கள். பிரமாதமாகப் பிச்சிட்டுப் போகும் அப்பதான் எனக்கு இந்த ஐடியா, இராசிபலன் புத்தகம் போடுகிற எண்ணம் வந்தது. வெற்றிகரமாக வண்டி ஓடுது என்று பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கப் பேசினார். வேறொரு சமயம் நண்பர் மேதாவி என்னிடம் கேட்டார். 'எழுத்தாளனுக்கு சமூகத்தில் ஓர் அந்தஸ்து இருக்கிறதா? சமூக மதிப்புப் பெறமுடிகிறதா எழுத்தாளனாலே?" என்று. நான் பதில் கூறுவதற்கு முன்பே அவர் தொடர்ந்து சொன்னார். நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க. உண்மையில் எழுத்தாளனுக்கு எந்த விதமான சமூகஅந்தஸ்தும் இல்லை. சமூகத்தின் மதிப்பை அவன் பெறவில்லை. ஒரு சினிமா நடிகனுக்கும், ஓர் அரசியல்வாதிக்கும் சமூகத்தில் இருக்கிற மதிப்பும் கவனிப்பும் ஓர் எழுத்தாளனுக்குக் கிடையாது. எழுத்தாளன்தான் அவன் என்னவோ ரொம்பப் பெரியவன், மற்றவங்களை விட உயர்ந்தவன் என்று அவனாகவே எண்ணிக் கர்வப்பட்டுக் கொள்கிறான் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிற ஒரு மயக்கநிலைதான் அது.